மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 31 மா 2017

உயிர் மெய் 2 - அராத்து - நாள் 24

உயிர் மெய் 2 - அராத்து - நாள் 24

சந்தன் வீட்டுக்குச் சென்று தேவையான டாக்குமெண்ட்டுகளை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்தார்கள். வீட்டில் சாந்தவியையும் ஷமித்ராவையும் விட்டுவிட்டு விதேஷ் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான். ஷமித்ராவை அடுத்த வாரம் முழுக்க மெடிக்கல் அப்ளை செய்யச் சொன்னான்.

சாந்தவியிடம், ‘உன்னால் லீவ் போட்டுவிட்டு ஷமித்ராகூட இருக்க முடியுமா?’ என்று கேட்டான் விதேஷ்.

‘ப்ச்’ என்றாள் சாந்தவி தலையை தூக்கியபடி, கண்களை முழுக்க மேலே உயர்த்தினாள். இதெல்லாம் கேக்கணுமா என்றது அவளது பாவனை.

போலீஸ் ஸ்டேஷனில் சென்று தேவையான டாக்குமெண்ட்ஸை கொடுத்தான். நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. வந்த வெறுப்பில் பக்கத்தில் இருந்த ஒரு ஏ.சி. பாரில் போய் ஒரு பியரை குடித்தான். சற்று நிதானம் வந்தது. இன்ஸ்பெக்டரை பார்த்து, ‘பேரண்ட்ஸ் ஈவ்னிங் இல்லைன்னா நைட் வந்துடுவாங்க’ என்றான். இன்ஸ்பெக்டரிடம் மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டான்.

மருத்துவமனைக்குச் சென்றான். மீண்டும் காத்திருப்பு. பணம் கொடுத்தும் நிலைமையை தெரிந்துகொள்ள முடியவில்லை. திடீரென சாந்தவி சொல்லிய டாக்டர்.சிரோன்யா ஞாபகம் வந்தது. சிரோன்யா நம்பரை சாந்தவியிடம் வாட்ஸப் மூலம் வாங்கி சிரோன்யாவுக்கு அடித்தான். எல்லோருக்கும் ரிங் போவதுபோலவே இவளுக்கும் ரிங் போனது. யாரும் போனை எடுக்காததுபோல இவளும் எடுக்கவில்லை.

அங்கேயும் இங்கேயும் பார்த்துக்கொண்டு வெட்டியாக நின்றபோது மொபைல் அடித்தது, சிரோன்யாதான். எடுத்துப் பேசினான். நிலைமையைச் சொன்னான். நல்லகாலம் ட்யூட்டியில் இருந்தாள். காத்திருக்கச் சொன்னாள், வந்து பார்ப்பதாகச் சொன்னாள்.

கிட்டத்தட்ட, 40 நிமிட காத்திருத்தலுக்குப் பின் சிரோன்யா வந்தாள். மிகவும் அவசரமான உடல்மொழி அவளிடம் தொத்தியிருந்தது. கை, கால்கள் எல்லாம் ஆடியபடி பரபரத்துக்கொண்டே இருந்தன. பேசும்போதே விழிகள் 360 டிகிரி சுழன்றபடி இருந்தன. முகம், பதற்றத்தையும் வேகத்தையும் உணர்ச்சிகளாக வழிய விட்டபடி இருந்தது. இவையெல்லாவற்றையும் தாண்டி சிரோன்யா வசீகரமாக இருந்தாள். மெல்லிய மேக் அப் உறுத்தாமல். அதேசமயம், இந்த மருத்துவமனைக்கு அந்நியம் இல்லாமல் இருந்தது. தேவையான ஒன்றாகவும் இருந்தது.

நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

‘சாந்தவிக்கு நீங்க ?’

‘ஃப்ரெண்ட்…’

‘ஓ…’

‘க்ளோஸ் ஃப்ரெண்ட்…’

‘ஓகே…இங்க அட்மிட் ஆகி இருக்குறவரு?’

‘பேரு சந்திரசேகரன். என் ஸிஸ்டரோட ஃப்ரெண்ட்’

‘பேரண்ட்ஸ்?’

‘இனிமேதான் வருவாங்க’

‘ஓகே, நான் என்ன செய்யணும்?’

‘இல்ல, ஒண்ணுமே புரியல. நெக்ஸ்ட் என்னா செய்யணும்? ஒரே கன்ஃபியூஷன். பேரண்ட்ஸ் வந்தா என்ன சொல்லணும்? ஒண்ணுமே புரியல. நீங்க கொஞ்சம் என்னன்னு பாத்து, நிலைமையைச் சொல்லி, கைட் பண்ணா வசதியா இருக்கும்.’

‘அண்டர்ஸ்டுட்’. டீட்டெயில்ஸை வாங்கிக்கொண்ட சிரோன்யா ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, என்னன்னு பாத்துட்டு வந்து அப்டேட் சொல்றேன்’ என்றபடி ஓடினாள். அவள் ஓடுவது பறப்பதுபோல இருந்தது.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

நாள் 20

நாள் 21

நாள் 22

நாள் 23

வெள்ளி, 31 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon