மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 29 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 22)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 22)

ஷமித்ராவின் கால் தொடர்ந்து அடித்துக்கொண்டு இருந்ததும் விதேஷ் எடுத்தான். கொஞ்சம் கடுப்புடன் என்ன ஷமித்ரா என்று கேட்டான்.

‘சந்தன் நைட்டே கெளம்பிட்டாண்ணா. ஆக்ஸிடண்டாம். ஹாஸ்பிடலில் சேத்திருக்காங்க. நைட்ல இருந்து எனக்கு கால் பண்ணிட்டே இருந்திருக்காங்க, தூக்கமா இருந்ததுல எடுக்கலை. போய் பாக்கணும்ணா’ என்றாள்.

‘ஓ மை காட். 10 நிமிஷத்துல கிளம்பி வரேன். போயிடலாம்’ என்றான் விதேஷ்.

சாந்தவியும் விதேஷும் அவசரமாக குளித்துக் கிளம்பினார்கள்.

மூவரும் ஒரே காரில் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

‘இப்போது பார்க்க முடியாது. ரொம்ப மோசமான ஆக்ஸிடண்ட், ஐசியூ-வில இருக்கிறான். அப்பா அம்மா, நெருங்கிய உறவுக்காரங்களுக்கு தகவல் சொல்லிடுங்க’ என்றனர்.

மேலதிக விபரங்கள் வேண்டுமெனில் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்க்கச் சொன்னார்கள்.

ஷமித்ராவை ஹாஸ்பிடலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, போலீஸை பார்க்கக் கிளம்பினான் விதேஷ். சாந்தவி ஷமித்ராவுடன் இருந்தாள்.

ஷமித்ராவுக்கு கலக்கமாகவும் மயக்கமாகவும் இருந்தது. அடிவயிறு பயத்தை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தது. தான்செய்த வெட்டிவேலையால்தானே சந்தன் அந்த நள்ளிரவில் போதையோடு கிளம்பினான் என்று நினைத்தபோது, இதுவரை அடக்கிவைத்திருந்த அழுகை வெடித்துக் கிளம்பியது.

ஷமித்ராவை தேற்றினாள் சாந்தவி. அழுகையினூடும், பயத்தினூடும் ஷமித்ராவுக்கு வாந்தி வந்தது. சாந்தவியின் தோள்களில் சாய்ந்துகொண்டாள்.

போலீசிடம் விசாரித்துவிட்டு வந்தான் விதேஷ். கார் மேம்பாலத்தை பொத்துக்கொண்டு கீழே கவிந்ததாகவும், எக்கச்செக்க ரத்தம் வெளியேறியதாகவும் சொன்னான். போலீஸ் பார்த்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பெற்றோர் வந்ததும் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து மாற்று ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்றும் கூறினான். எஃப்ஐஆர் போட்டுவிட்டதாகவும் சொன்னான்.

சாந்தவியிடம், ஷமித்ராவை அழைத்துக்கொண்டு போய் ஒரு காஃபி வாங்கித்தரச் சொல்லிவிட்டு டாக்டரிடம் விசாரிக்கச் சென்றான்.

கொஞ்சநேர காத்திருத்தல் மற்றும் கடைநிலை ஊழியருக்கு கொஞ்சம் பணம் அடித்ததில், டாக்டரை சந்திக்க முடிந்தது.

‘கால்கள் ஃப்ராக்ச்சர். மண்டையிலும் பலத்த அடி. தேவையான அனைத்து ஸ்பெஷலிஸ்டுகளும் பார்த்துவிட்டார்கள். இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. முதலில் உயிர் காக்கும் அவசர சிகிச்சையை செய்துகொண்டு இருக்கிறோம். உயிரைக் காக்க முடிந்தால் மேற்கொண்டு சொல்கிறோம்’ என்றார் டாக்டர்.

டாக்டரிடம் கை கொடுத்துவிட்டு, ‘ப்ரைவேட் ஹாஸ்பிடலுக்கு மாற்றலாமா’ என்று கேட்டான் விதேஷ்.

‘பெஸ்ட் டாக்டர்ஸ் எல்லாம் கவர்ன்மெண்ட்லதாங்க இருக்காங்க. உயிரை விட்டுத்தான் வேலை பாக்குறோம். பெஸ்ட் மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்கு. என்னா கொஞ்சம் காத்திருக்கணும், உடனுக்குடன் அப்டேட்ஸ் கிடைக்காது. நிறைய நோயாளிகளை பாக்கணும் இல்லியா? பேஷண்ட்ஸ் அட்டெண்டர்ஸ்கிட்ட அப்டேட்ஸ் ஒப்பிச்சிட்டு இருக்கும்நேரத்தில் இன்னும் 2 பேஷண்ட்ஸ் பாக்கலாம்னு நினைப்போம். உங்களுக்கு ஜிகினா, சீரியல் லைட்தான் வேணும்னா பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு மாத்திக்கோங்க. அதுக்கும் இன்னும் 2 நாள் வெயிட் பண்ணுங்க. இப்ப ரொம்ப சீரியஸ், மாத்துற கொஞ்ச நேரத்துலகூட உயிர் போயிடலாம்’ என்றார்.

‘சாரி டாக்டர்’ என்று மீண்டும் கை கொடுத்தான் விதேஷ்.

‘டூ பீ ஃப்ராங்க், கண்டிஷன் ஈஸ் எக்ஸ்ட்ரீம்லீ டேஞ்சரஸ். பிழைக்க 10 சதவீதம்தான் வாய்ப்பு’ என்று சொல்லிவிட்டுப் போனார் டாக்டர்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

நாள் 20

நாள் 21

புதன், 29 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon