மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 மா 2017

உயிர் மெய் தொடர் அராத்து - நாள் - 21

உயிர் மெய் தொடர் அராத்து - நாள் - 21

லவ் வந்தா கண்டினியூ பண்ணுவேன் என்று விதேஷ் சொன்னதும், ‘குட் கவுன்ட்டர் ஆர்கியூமெண்ட்’ என்று சொல்லிச் சிரித்த சாந்தவி, ‘தூக்கம் வருது விதேஷ், காலைல பேசிக்கலாம், குட் நைட்’ என்று சொல்லிவிட்டு விதேஷ் படுக்கையில் படுத்துக்கொண்டாள். இழுத்துப் போர்த்திக்கொண்டாள். உடனே தூங்கியும்விட்டாள்.

கொஞ்சநேரம் சாந்தவி படுத்துறங்குவதையே பார்த்துக்கொண்டிருந்த விதேஷ், சிகரட் அடிக்கலாம் எனத் தேடினான். சிகரட் கிடைக்கவில்லை. அன் ஃபினிஷ்டாக ஃபீல் செய்த விதேஷ், படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான், அதிக போதை என்பதால் அப்படியே தூங்கிவிட்டான்.

அதிகாலை, இன் கம்ஃபர்டாக இருந்ததால் லேசாக விழிப்பு வந்தது விதேஷுக்கு. அப்போதுதான் உட்கார்ந்தபடியே தூங்கியது தெரியவந்தது. பக்கத்தில் பார்த்தால் சாந்தவி இல்லை. விதேஷ் எழுந்து வாஷ்பேசினில் வாய் கொப்பளித்துக்கொண்டான். வாய் கசந்தது. ஃப்ரிட்ஜைத் திறந்து லைட்சீ டிரிங்க் எடுத்துக் குடித்தான்.

பாத்ரூமில் இருந்து சாந்தவி வெளியே வந்தாள். அவளுக்கும் தலைவலியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பாத்ரூமில் போய் முகம் கழுவிக்கொண்டு நீலக்கலர் தேங்காய்ப்பூ டவலை மட்டும் சுற்றியபடி வெளியே வந்தாள்.

விதேஷ், சாந்தவியை புதிதாகப் பார்த்தான்.

தேங்காய்ப்பூ டவலைத் தாண்டி வெளிப்பட்ட எழில்கள் விதேஷை தூண்டின. சாந்தவியின் மேனியில் இருந்த நீர்த்திவலைகள் கவர்ச்சியை அதிகரித்தன. சூரியன் இப்போதுதான் ட்யூட்டியை ஆரம்பித்தபடி இருந்ததால், இருட்டும் வெளிச்சமும் குழைந்தபடி இருந்த லைட்டிங் மென்மையான உணர்வுகளைத் தூண்டும்படி இருந்தது.

விதேஷ் எழுந்துசென்று சாந்தவியின் காதருகில் கிசுகிசுப்பாக ‘ஐ லவ் யூ சாந்து’ என்றான்.

‘மீ டூ’ என்று முனகினாள்.

நாம கம்பானியனா இருக்கலாம். நான் முடிவு பண்ணிட்டேன், ஒரு வாரமெல்லாம் தேவையில்லை, இப்பவே டிசைட் பண்ணிட்டேன் என்ற விதேஷ்.

இருவரும் படுக்கைக்கு சென்றார்கள். சாந்தவி எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. தேர்ந்த ப்ரொஃபஷனல் போல விதேஷின் ஆசைகளுக்கு தீ மூட்டினாள். அவனை வெறிகொள்ள வைத்து தூண்டிவிட்டாள்.

ஆனால் ஒவ்வொருமுறையும் களத்தையும் வியூகத்தையும் மாற்றிய சாந்தவி புதிதாக ஆரம்பித்தாள். பித்து தலைக்கேறியது விதேஷுக்கு.

அந்தரத்தில் மிதப்பதுபோல உணர்ந்தான். மொத்த உடம்பும் கூச்சத்திலும் கிளர்ச்சியிலும் மலர்ந்தது. உடம்பின் ஒவ்வொரு செல்களும் டைனஸரைப்போல பெரிதாகி ஆட்டம் போடுவதுபோல உணர்ந்தான். பிதற்ற ஆரம்பித்தான். சாந்தவிக்கு அவனது பிதற்றல் உற்சாகத்தைக் கொடுத்தது. அவளும் உணர்ச்சிப்பெருக்கால் காதல் மொழிகளைக் கூறினாள்.

அவளை ஆக்ரமிக்க விதேஷ் முயற்சித்தபோது, அதைவிட அதிகமான எதிர்விசையுடன் அவனை அடக்கிய சாந்தவி, விதேஷை மொத்தமாக தன் கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டாள். அவளது அன்பும் காதலும் விதேஷின் மீது இடியென இறங்கியது. விதேஷின் கையும் கால்களும் அந்தரத்தில் நடனமாடின.

இருவரின் கூக்குரல்களோடு முடிவுக்குவருகையில், விதேஷின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது. ஷமித்ராதான் அழைத்துக்கொண்டு இருந்தாள்.

மொபைலை கட் செய்துவிட்டு, சாந்தவியின் கழுத்தில் முகத்தை புதைத்துக்கொண்டு ஆனந்தத்தில் அழுதுகொண்டிருந்தான் விதேஷ். சாந்தவிக்கும் கண்களில் கண்ணீர்.

நாள் 1 நாள் 2 நாள் 3

நாள் 4 நாள் 5 நாள் 6 நாள் 7 நாள் 8 நாள் 9 நாள் 10 நாள் 11 நாள் 12 நாள் 13 நாள் 14 நாள் 15 நாள் 16 நாள் 17 நாள் 18 நாள் 19 நாள் 20

செவ்வாய், 28 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon