மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 20)

 அராத்து எழுதும் உயிர்  மெய் - 2  (நாள் - 20)

ஷமித்ராவுக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தது. ice (in case of emergency) என்று ஷமித்ரா நம்பரைத்தான் சேமித்து வைத்திருந்தான் சந்தன். ஷமித்ரா சைலண்டில் போட்டு தூங்கிக்கொண்டிருந்தாள். வைப்ரேட்டர் சத்தத்திலேயே எழுந்திருக்கக்கூடிய ஆள்தான் ஷமித்ரா. இப்போது போதையில் தூங்கிக்கொண்டிருந்ததால் தெரியவில்லை.

விதேஷ் ‘பேசு’ என்றதும், சாந்தவி அவனை நெம்பித் தள்ளி எழுந்து உட்கார்ந்தாள். ‘மேல வெயிட்டைப் போட்டு அமுக்கினா எப்பிடி பேசறது’ என்று சிரித்தாள்.

‘சரி ஒக்காந்து பேசலாம்’ என்ற விதேஷ், இருவருக்கும் இன்னொரு டிரிங்க்ஸ் கலந்தான். சோஃபாவில் இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

‘சொல்லு சாந்தவி... என்னென்ன டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்’ என்றான் விதேஷ், முகர்ந்து பார்த்து ஒரு சிப் அடித்தான்.

‘யேய், ஓவரா கிண்டல் பண்ணாத… பெரிய கண்டிஷன்லாம் இல்ல. நீ கம்பானியன் வேணும்னு போஸ்ட் போட்டிருந்த இல்ல? அது சீரியஸா? அப்படின்னா, நான் ரெடி. ஆனா கொஞ்சமாச்சும் லாங் டேர்மா இருக்கணும். என் செலவை நான் பாத்துப்பேன். உன் கூடவே தங்கிப்பேன்’

‘அது சீரியஸ்னு சொல்ல முடியாது. காமெடியும் இல்ல. சரியான ஆள் கிடைச்சா சீரியஸ். யாரும் மாட்டலைன்னா காமெடி’ என்றான் விதேஷ்.

‘ஓ… சரி. நீ இப்ப யார் கூடவாவது ரிலேஷன்ஷிப்ல இருக்கியா விதேஷ்?’

‘இல்ல சாந்தவி’

‘இந்த சிண்ட்ரியா?’

‘அவ மேல ஒரு கிரேஸ். நடிகை இல்லையா? அதான். ஆனா அவல்லாம் லாங் டேர்ம் ரிலேஷன்ஷிப்புக்கு ஒத்து வரமாட்டா’

‘ஓ…ஓக்கே. நான் வேணா இங்க வந்து ஒரு வாரம் தங்கிக்கறேன். பழகி பாப்போம். பிடிச்சிருந்தா கண்டினியூ பண்ணுவோம். இல்லன்னா பிரிஞ்சிடலாம். பிடிச்சிதுன்னா, அதுக்கு அப்புறம் எல்லாம் வச்சிக்கலாம். அது வரைக்கும் ஃபிரண்ட்ஸா இருப்போம். நோ டச்சிங், கிஸ்ஸிங்’ என்றாள் சாந்தவி.

‘அது ஓகே. ஒரு வாரம் இங்க வந்து தங்கிக்கோ. ஆனா, எந்த கண்டிஷன்ஸும் வேண்டாம். பிடிக்கிற வரைக்கும் சேர்ந்து இருப்போம். யாருக்காச்சும் பிடிக்கலைன்னா பிரிஞ்சிடலாம். லாங் டேர்மா இருக்கணும், அது இதுன்னு எந்த கண்டிஷன்ஸும் வேணாம், ஓக்கேவா?’ என்றான் விதேஷ்.

‘எனக்கு அப்பிடி பட்டும்படாம இருக்க முடியாது விதேஷ். இருக்குற வரைக்கும் லவ்வபிளா இருக்கணும். கேரிங்கா இருக்கணும். வேற யார் கூடவும் சுத்தக்கூடாது. யார் கூடவும் வேற ரிலேஷன்ஷிப் வச்சிக்கக்கூடாது’ என்றாள் சாந்தவி.

‘எனக்கு அல்ரெடி கொஞ்ச பேர்கூட லிங்க் இருக்கே… எப்பவாச்சும் அவங்களை பாப்பேன். அப்புறம் சிண்ட்ரியா மேல எனக்கு ரொம்ப க்ரஷ் அண்ட் லவ். அவளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருப்பேன். வாய்ப்புக் கிடைச்சா, அவளை ஒரு தடவையோ ரெண்டு தடவையோ… யூ நோ… இதெல்லாம் உனக்குத் தெரியாம வேணா பாத்துக்கறேன். பட் நாம என்ன லவ்வர்ஸா? ஏன் இந்த கண்டிஷன்லாம்?’

‘இருக்குற கொஞ்ச நாள் லவ்வர்ஸாதான் இருப்பமே. அது ஜாலியா ப்ளஷரா இருக்கும் விதேஷ். அடிக்கடி ஆள் மாத்திட்டே இருந்தா வெறுமையா ஆயிடும். செக்ஸும் அலுத்துடும். லவ் இல்லாம செக்ஸ் ஃபுல்ஃபில்லே ஆகாது தெரியுமா?’

‘நீ என்ன வர்ஜினா சாந்தவி?’

‘நீ என்னை ஹர்ட் பண்ணனும்னே கேக்கற. ஃபைன் நான் வர்ஜின் இல்லைதான். ஆனா லவ் இல்லாம யார் கூடவும் என்னய ஷேர் பண்ணிக்கிட்டதில்ல’

‘நான் கூட இருந்துட்டு, அதுக்கு அப்புறம் லவ் வந்தா கண்டினியூ பண்ணுவேன்’ என்றான் விதேஷ்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

நாள் 19

திங்கள், 27 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon