மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 19)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 19)

PC: ILa Coronel

ஷமித்ராவுக்கு கோபம் தலைக்கேறியது. இப்படி சொல்லாமல் ஓடுவது, பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கட் செய்வது போன்ற செயல்கள் எரிச்சலை உண்டாக்கும். இதைப்போன்ற ஆட்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதேயில்லை. அதிலும் முக்கியமாக பொருள்களை கீழே போட்டு உடைப்பது அறவே பிடிக்காது. இப்போதுதான் உறைத்தது, கிளாஸை சந்தன்தான் கீழே போட்டு உதைத்திருக்கிறான் என்று. திரும்ப பார்ட்டி நடந்த இடத்துக்கு வந்தாள். நீர்த்தியும் உணவு ஆட்களும் தண்ணி அடித்துக்கொண்டு இருந்தார்கள். சவீந்தரைக் காணோம்.

சுமந்தன் ஷைலஜாவை கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

ஷமித்ராவைப் பார்த்ததும், உணவு வழங்கும் ஆட்கள், ‘சாப்பாடு ஏதேனும் வேண்டுமா?’ என்றார்கள்.

‘என்ன இருக்கு?’ என்றதற்கு, ‘எல்லாம் இருக்கு... யாரும் ஒழுங்கா சாப்பிடலை’ என்றனர்.

கொஞ்சமாக சிக்கன் பிரியாணியும், தயிர் சாதமும் கேட்டு வாங்கிக்கொண்டாள். சாப்பிட்டுக்கொண்டே நீர்த்தியிடம் பேசினாள்.

‘ஏன் நீர்த்தி, இப்பிடி நைட் முழுக்க முழிச்சுட்டு இருந்துட்டு, காலைல வேலைக்கு போறது கஷ்டமா இருக்காதா?’

‘இல்ல ஷமி, டெய்லி இப்பிடி ட்யூட்டி பார்க்க மாட்டேன். வாரத்துக்கு ரெண்டு மூணு நாள்தான். அதுவும் வீக் எண்ட் ரெண்டு நைட் ப்ரோக்ராம் சிக்கிடும். மறுநாள் லீவ் தானே? அதான் ஜாலியா போய் தூங்கிடுவேன்’ என்றான்.

‘இதையே ஃபுல் டைமா செய்ய முடியாதா நீர்த்தி?’

‘முடியாது ஷமி. நம்மூர்ல கஷ்டம். டீஜேக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க’ என்று கூறி சிரித்தான். அவன் கண் அடித்தது போல இருந்தது. ஷமித்ரா தலையை உலுக்கிக்கொண்டாள்.

‘இதுக்கு நம்மூர்ல சம்பளம் கம்மி. கௌரவமும் இல்லை. எனக்கு இதான் பிடிச்ச வேலை. ஆனா கௌரவத்துக்காக சாஃப்ட் வேர் வேலை’.

‘இதைப்போல, தனி பார்ட்டிக்குத்தான் போவீயா நீர்த்தி?’

‘இல்ல , பார் , க்ளப்புக்குத்தான் போவேன். விதேஷ் மட்டும் தனியா கூப்டாலும் நல்லா பே பண்ணுவாரு, அதான் இங்க மட்டும் வருவேன்’.

‘கேர்ள் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களா?’

‘நிறைய …..ஒவ்வொரு பாரிலும், க்ளப்பிலும் நிறைய பேர் இருக்காங்க’ என்று கூறி சிரித்தான்.

ஷமித்ராவும் சிரித்தாள். நீர்த்தியின் மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டாள். ‘தேங்க்ஸ் அண்ட் பை’ சொல்லி விட்டு, தன் அறைக்குச் சென்றாள். நீர்த்தி ஷமித்ராவுக்குத் தெரியாமல் அவளை சில போட்டோக்கள் எடுத்து வைத்துக்கொண்டான்.

இன்னொரு அறையில், சாந்தவி கம்பானியன் டீல் போட்டதும் , கடுப்பானான் விதேஷ். இன்னும் கொஞ்ச நேரத்தில் மஞ்சத்தில் கொஞ்சி குலாவலாம் என்ற நினைப்பில் மண் அள்ளி போட்டதும் ஏமாற்றமானது.

‘டீல் பேசற நேரமா இது சாந்தவி?’ என்றபடியே மீண்டும் அவள் தோளைப் பற்றினான்.

‘இல்ல விதேஷ் , நான் தெளிவா சொல்லிடணும்னு பாக்கறேன். ஐ ஹேட் ஃப்யூ லவ் ஃபெயிலியர்ஸ், கல்யாணத்திலும் இண்ட்ரெஸ்ட் இல்ல . அதுக்காக பாத்தவன் கூடல்லாம் ஜஸ்ட் ஒன் நைட் படுத்துக்கவும் முடியாது. உன்னை அப்சர்வ் பண்ணிட்டு வந்தேன். நீயும் நானும் ஒரு வேவ்லெங்த்துல செட் ஆவோம்னு தோணிச்சி. சும்மா மீட் பண்ணி பேசலாம்னுதான் வந்தேன். இப்பிடி திடீர்னு ஒரே ரூம்ல தங்குவோம்னு நினைக்கலை’ என்றாள் சாந்தவி.

சாந்தவியை தன் மேல் சாய்த்துக்கொண்டான் விதேஷ். சாந்தவியால் எதிர்ப்பு சொல்ல இயலவில்லை. சாய்ந்து கொண்டாள்.

‘சரி கம்பானியன்ஷிப்புன்னா என்னான்ன டீல்? என்ன எதிர்பாக்குற? ஒவ்வொண்ணா சொல்லு’ என்று சொன்னபடி, அவளின் பின்னங்கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தான். ‘கூசுகிறது’ என்று அவள் திரும்பவும் அவளை இறுக்கிக்கட்டிக்கொண்டு படுக்கையில் கிடத்தி மேலே படுத்துக்கொண்டு தன் முட்டியால் தன் பாரத்தை தரையில் தாங்கிக்கொண்டான்.

‘என்னா விதேஷ் இது? பேசிட்டு இருக்கும்போதே’ என்று சாந்தவி சொல்ல...

‘பேசிட்டுதான் இருக்க போறோம், பேசு’ என்றபடியே அவளை முத்தமிட்டான் விதேஷ்.

கடும் எரிச்சலில், கடும் போதையில், ராஷாக காரை ஓட்டிக்கொண்டு சென்ற சந்தன் மேம்பாலம் வளைவதை கவனிக்காமல் நேராகச் சென்று மோதினான். கார் மேம்பாலத்தை உடைத்துக்கொண்டு தரையில் பாய்ந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பிறகு கோமாவுக்குச் சென்றான்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

நாள் 18

ஞாயிறு, 26 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon