மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 25 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 18)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 18)

சந்தன், சிண்ட்ரியா மீது ஒட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்த கடுப்பில் இருந்த ஷமித்ரா, அந்த கடுப்பைக் காட்டத்தான் சவீந்தர் அழைத்ததும் நடனம் ஆடச் சென்றாள். சவீந்தர், தன் அண்ணனின் நண்பன் என்பதால் அத்துமீற மாட்டான் என்பதும் இன்னொரு காரணம். ஆனால், ஷமித்ரா அழைத்ததும் வந்ததும் சவீந்தர் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.

கேட்டவுடன் கொடுக்கும் பெண்கள் மற்றும் அழைத்தவுடன் வரும் பெண்களை எல்லாம் ஆண்கள் வேறுமாதிரி நினைத்துக்கொள்கிறார்கள். டைம் என்னாங்க என்று கேட்டு, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே, 11 ஓ கிளாக் என்று சொன்னால், அந்தப் பெண்ணை இளக்காரமாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். இளிக்கிறா, மடங்கிடுவா போலிருக்கு என்றே எடுத்துக் கொள்கிறார்கள். முறைத்துக்கொண்டு, திமிர் காட்டும் பெண்ணுக்குத்தான் ஆண்களிடையே மரியாதை.

இதே விதி நடனத்துக்கும் பொருந்தும். நடனம் ஆட அழைத்தால் மறுக்காமல் செல்ல வேண்டும் என்பது நாகரிகமாக இருந்தாலும், சென்று இரண்டு ஸ்டெப் போட்டுவிட்டு தர்மசங்கடமாக சிரித்துக்கொண்டு, இட்ஸ் ஓகே, போதும் என்று விலகி வந்துவிட வேண்டும். அப்படிச் செய்யாமல் கையை பிடித்துக்கொண்டு பாடல் முழுக்க ஆடினால் எல்லை மீறப்படும்.

விதேஷ் தங்கை என்று தெரிந்தும், பாய் ஃபிரெண்ட் உடன் இருக்கிறான் என்று தெரிந்தும், சவீந்தர் எல்லை மீறினான். இடையில் கை வைத்ததுகூட பரவாயில்லை என்று எடுத்துக்கொண்டால்கூட, அவளை அப்படியே இழுத்து மார்போடு அணைத்தது அயோக்கியத்தனம்தான். நடனம் ஆட பெண்கள் சென்றால் இப்படித்தான் ஆழம் பார்த்து, அவர்களே ஏதோ புரிந்துகொண்டு, டக்கென்று மார்பு, இடை, பின்னழகு என முன்னேறுகிறார்கள்.

ஷமித்ராவை இடையில் கைகொடுத்து இழுத்து அணைத்து ஸ்டெப் போட்டதும், ஷமித்ராவுக்கு துணுக்குற்றது. அறையலாம் என்று தோன்றியதை ஒரு செகண்டில் மாற்றிக்கொண்ட ஷமித்ரா, தன் முட்டிக்காலால் சவீந்தரை ஒரு எத்துவிட்டாள். அது, மூளையில் போய் வெடிகுண்டாக வெடித்தது.

இரண்டு கையால் மடியைப் பிடித்துக்கொண்ட சவீந்தர் மெல்ல நடந்து போதையாகி மயங்கிக்கொண்டிருந்த ஷைலஜாவின் அருகில் போய் அமர்ந்தான். ஷைலஜா, சவீந்தரின் மடியில் சரிந்தாள். சவீந்தருக்கு வலி இன்னும் பின்னியெடுத்தது.

சுமந்தன் பாதி கரைந்திருந்த ஐஸ் க்யூப்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு, கர்டு ரைஸ் இருக்கா? என்ன ஊறுகாய் இருக்கு? என்று உணவு சப்ளையர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

சவீந்தரை எத்திய ஷமித்ரா, டிரிங்க்ஸ் டேபிளுக்கு வந்தாள். கிளாஸ் நொறுங்கிய சத்தம் கேட்டது அவளுக்கு. ஆனால் கீழே விழுந்ததா? யாரேனும் போட்டு உடைத்தார்களா? என்று கவனிக்கவில்லை.

புதிதாக ஒரு கிளாஸை எடுத்து டிரிங்க் நிரப்பிக் கொண்டாள். பொறுமையாக ஐஸ் கியூப்ஸை போட்டுக்கொண்டு ஒரு சிப் சிப்பினாள். இப்போது ஷமித்ராவுக்கு ஸ்மோக் செய்ய வேண்டும்போல இருந்தது. எப்போதாவது சந்தனிடம் வாங்கி இரண்டு இழுப்பு இழுப்பாள்.

அதற்காக சந்தனைத் தேடினாள். சந்தன் காம்பவுண்ட் கேட்டைக் கடந்து காரை எடுத்துக்கொண்டு வெளியேறுவதை கடைசி நொடியில் பார்த்தாள். எழுந்து ஓடினாள். அதற்குள் கார் பறந்துவிட்டது.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

நாள் 17

சனி, 25 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon