மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 24 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 17)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் - 17)

ஓவியம்: சசி மாரீஸ்

சாந்தவியை முதன்முதலாகத் தொடுகிறான் விதேஷ். கொஞ்சம்கூட தயங்காமல் சாந்தவியின் இடையில் கையைப் போட, எந்த எதிர்ப்பும் இல்லாமல் சாந்தவியும் விதேஷுடன் சென்றாள். விதேஷுக்குச் சிரிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. எத்தனை பெண்களைப் பார்த்திருக்கிறான்.

பெண்களின் கண்களில் தெரியும் அழைப்பை சரியாக படிக்கத் தெரிந்தவன். இவள், இன்று இரவே தயாராக இருப்பாளா? இவளை சாய்க்க எத்தனை மீட்டிங் தேவைப்படும்? என குத்துமதிப்பாக கணக்குப் போடுவதில் வல்லவன் என நண்பர்களிடையே பெயரெடுத்திருந்தான்.

காதல், அன்பு, பாசம் என்பதெல்லாம் விதேஷ் அகராதியில் எப்போதோ அர்த்தமிழந்துவிட்டன. விதேஷைப் பொறுத்தவரை சிம்பிள் கான்சப்ட். தான் என்ன ஸ்டேட்டஸ்? மடக்க வேண்டிய பெண் எந்த ஸ்டேட்டஸ்? இதுதான் முதல் ஈக்குவேஷன். அதற்குப் பிறகுதான் மற்ற சின்னச்சின்ன ஈக்குவேஷன்கள் வரும். அதெல்லாம் ஆளைப் பொறுத்து, கேரக்டரைப் பொறுத்து மாறும். முதல் ஈக்குவேஷன் ஸ்ட்ராங்காக இருந்தால் மற்ற ஈக்குவேஷன்கள் எல்லாம் சுலபமாகத் தீர்த்துவிடலாம்.

பணத்திலும் அந்தஸ்திலும் வசதி மற்றும் செலவழிப்பதில் விதேஷ் அப்பர் ஹேண்ட் எனில், இந்த வகையறாவில் லோயர் ஹேண்ட் பெண்ணை மடக்குவது சுலபம். பெண் சரி சமமான அந்தஸ்து எனில், எஃபர்ட் போட வேண்டும். பெண் விதேஷைவிட இவையனைத்திலும் அதிகம் எனில், கடுமையாக உழைக்க வேண்டும், தேவுடு காக்க வேண்டும். சிண்ட்ரியா விஷயத்தில் இதுதான் விதேஷுக்கு நடந்து கொண்டிருக்கிறது. எக்கச்சக்க உழைப்பைப் போட்டிருக்கிறான். தெய்விகக் காதலன்கூட செய்யாத பல விஷயங்களை சிண்ட்ரியாவுக்காக செய்திருக்கிறான். ஆனாலும் சிண்ட்ரியா படியவில்லை. உடன் சேர்ந்து தண்ணி அடிக்கிறாள், நடனம் ஆடுகிறாள். ஆனாலும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள். அவள் கண்களில் இன்னும் அந்த அழைப்பை விதேஷ் காணவில்லை.

விதேஷ் ஒருநாள் சவீந்தரிடம் இப்படிச் சொன்னான்: இதே பெரிய டேரக்டர் இல்ல. ஹீரோன்னா ஒரு நைட்தான் மச்சி டைம். மடங்கி இருப்பா. இல்ல, பெரிய படா கோடீஸ்வரன்னாலும் அதே ஒரு நைட்தான். இளிச்சிட்டு அவன் கார்ல ஏறி ஒக்காந்து இருப்பா. அவன் நேரடியா இடுப்பைத் தொடலாம். கண்டுக்க மாட்டா. நான் ஒரு சிறு தொழிலதிபர், அதான் இவ்வளவு மெனக்கெட வேண்டிக் கெடக்கு. என்னிக்காவது ஒருநாள் எவனாவது அசிங்கிப்படுத்தி, வெறுப்பேத்தி அனுப்புவான். அந்த நேரத்துக்காக காத்துட்டு இருக்கேன். அதுவரைக்கும் காதல், அன்பு, கேரிங்-ன்னு சீன் ஓட்டிட்டு இருக்க வேண்டியதுதான்.

சிண்ட்ரியாவை தற்காலிகமாக மறந்த விதேஷ், சாந்தவியை அணைத்தபடி அறைக்குள் செல்கையில் மனதுக்குள் ஒன் நைட் பேபி என முணுமுணுத்துக் கொண்டான்.

அறைக்குள் விதேஷும் சாந்தவியும் நுழைந்தனர். விதேஷின் படுக்கை அறையே ஒரு தனி வீடு போல இருந்தது. லேப்டாப்பில் வேலை செய்ய ஒரு பகுதி, டீ காஃபி குடிக்க தனியாக ஒரு சோஃபா செட்டப். அகன்ற திரை டி.வி-யோடு ஹோம் தியேட்டர் செட்டப் தனியாக. கிங்க் சைஸ் கட்டில், அழகான கொசுவலை கோன் ஐஸ்போல தொங்கிக்கொண்டு.

உள்ளே நுழைந்து கதவைச் சாத்தியதும் துளியும் தாமதிக்காமல் பல நாள் பழகியவள்போல சாந்தவியை இழுத்து அவள்மேல் படர்ந்தான். சாந்தவியும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் விதேஷை பற்றிக்கொண்டாள். இருவரும் வெவ்வேறு டிரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்ததால், முத்தம் வேறு ஒருவகை காக்டெயிலை உருவாக்கியிருந்தது.

இப்போது படுக்கையில் அவள் மேல படர முயற்சிக்கையில், சாந்தவி எழுந்தாள். ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லிச் சென்றாள்.

அவள் வருவதற்குள் உடைகளை மாற்றி இலகுவான ஷார்ட்ஸோடு இருந்தான் விதேஷ்.

திரும்ப வந்த சாந்தவி, ஸ்டைலாக கட்டில் மீது அமர்ந்துகொண்டாள். மீண்டும் விதேஷ், அவளைப்பற்றி முயல்கையில் ,

‘ஒரு நிமிஷம் விதேஷ்’ என்று சொன்ன சாந்தவி, விலகி அமர்ந்தாள்.

‘நீ போட்ட போஸ்ட் பாத்தேன். நான் உன்கூட கம்பானியனா இருந்துக்கட்டுமா? யோசிச்சி சொல்லலாம். பழகிப் பார்த்துக்கூட சொல்லலாம். கம்பானியனா இருக்கலாம்னு முடிவானா மட்டும் நாம ‘பெட்டை ஷேர் பண்ணிக்கலாம் . இல்லன்னா, ஜஸ்ட் ஒன் நைட் எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல விதேஷ். நான் அப்படிப்பட்ட பொண்ணும் இல்ல’ என்றாள் சாந்தவி.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

நாள் 14

நாள் 15

நாள் 16

வெள்ளி, 24 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon