மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 14)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 14)

ஆர்த்தி சிண்டிரியா பற்றி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே , ஒரு மினி கூப்பர் காம்பவுண்டுக்குள் வந்து பார்க் செய்யப்பட்டது.

அதில் இருந்து ஆர்த்தி சிண்ட்ரியா இறங்கினாள். இறங்கியதும் , ஹாய் விதேஷ் என்று கையை ஆட்டினாள்.

விதேஷ் ஆர்த்தி சினிடிரியாவை நோக்கி ஓடினான்.

ஆர்த்தி , வெள்ளை நிற பாவடை அணிந்து இருந்தாள். அதில் வண்ணத்துப்பூச்சி , ரோஜாப்பூ போன்ற வடிவங்கள் அந்த பாவாடையில் போடப்பட்டு இருந்த ஓட்டைகள் மூலம் வெளிப்பட்டன. அந்த உருவங்கள் மூலம் அவளின் வாளிப்பான கால்களும் தொடைகளும் பின்னணியில் மின்னலடித்துக்கொண்டு இருந்தன. கடல் நீல வண்ண டாப்ஸ் அணிந்து இருந்தாள். அவள் நடக்கும்போது ஏறி இறங்கி அவளின் வயிற்றுப்பகுதியை எல் ஈ டி விளக்கு போல பளிச்சிட்டபடி இருந்தது.

சிண்ட்ரியாவை நெருங்கிய விதேஷ் , கை கொடுத்து , ஹேப்பிலீ வெல்கம் யூ என்றவன் , மென்மையாக அணைத்துக்கொண்டான். இட்ஸ் அன் ஹானர் டூ ஹேவ் யூ ஹியர் என்றான்.

அனைவர் அருகிலும் வந்து , அனைவருக்கும் பொதுவாக ஹாய் என்று கையை ஆட்டினாள். நீர்த்தி , அழகிய லைலா என்ற பாடலை ஒலிக்க விட்டான்.

ரெஃப்ரஷ் பண்ணிக்கணுமா ஆர்த்தி என்றான் விதேஷ்.

யெஸ் , ஃப்யூ மினிட்ஸ் என்றாள் சிண்ட்ரியா.

சிண்ட்ரியாவை உள்ளே அழைத்துப்போனான் விதேஷ். அவளை விட்டு விட்டு உடனே பார்ட்டி நடக்க இருக்கும் புல்வெளிக்கு வந்தான்.

சாந்தவிக்கு முகம் கொஞ்சம் சிறுத்துதான் போய் இருந்தது. ஷமித்ரா , சந்தன் தோளைப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள். சவீந்தர் டிரிங்க்ஸ் பாட்டில்களை அழகாக அடுக்கிய படி இருந்தான்.

விதேஷ் வந்து இவர்களுடன் இணைந்ததும் , சவீந்தர் , அந்த லைட்ஸை கொஞ்சம் அரேஞ்ச் பண்ணுடா என்றான்.

விதேஷின் நண்பன் சவீந்தர் , நிறம் மாறி எறியும் விளக்குகளை ஒழுங்குபடுத்தச் சென்றான்.

சாந்தவி , ஆர்த்தி மேல் ஏற்பட்ட பொறாமை காரணமாக , கொஞ்சமாக அமுங்கிய குரலில் , ம்ம்…அவ வர்ரதுக்குள்ள அந்த சினிடிரியாவை மீட் பண்ண கதையை கண்டினியூ பண்ணலாமே என்றாள்.

நான் க்ளப்பில் இருக்கும் பாரில் தனியா இருந்த அவ முன்னால போய் ஒக்காந்தேனா என்று ஆரம்பித்தான்…..

ஆக்சுவலாக அன்று நடந்த கதை :-

விதேஷ் லேசான போதையுடன் ஆர்த்தியின் முன்னால் போய் அமர்ந்தான். ஆர்த்தி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். யெஸ் என்றாள்.

ஹாய் , தனியா ஒக்காந்து இருந்தீங்க , டிஸ்டர்ப்டா இருந்த மாதிரி இருந்திச்சி , அதான் வந்தேன். ஆம் விதேஷ் , இந்த க்ளப்ல மெம்பர் என்றான் விதேஷ்.

ஓ…நத்திங்க் லைக் தட். தேங்க்ஸ் ஃபார் யூர் காம்ப்ளிமெண்ட் , எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் என்று கூறி சிரித்தாள்.

ஓ ..சாரி , டேக் கேர் என்று கூறி விதேஷ் அவன் டேபிளுக்கு எழுந்து சென்று விட்டான்.

விதேஷ் இவர்களிடம் சொல்லிய கதை :-

அவ முன்னால போய் ஒக்காந்தேன். அவ நிமிந்து பாத்தா . எல்லாரும் உங்களைத்தான் பாத்துட்டு இருக்காங்க , நானும் உங்களைத்தான் பாத்துட்டு இருந்தேன். அப்புறம் யோசிச்சேன் , நீங்க என்ன பொம்மையா ? சும்மா உங்களை பாத்துட்டு இருக்க ? நீங்களும் ஹ்யூமன் பீயிங்க்தானே ? அதான் பேசலாம்னு எழுந்து வந்து உங்க முன்னால ஒக்காந்துட்டேன் என்றேன்.

அவ ரொம்ப ரசிச்சி சிரிச்சா .

இந்த சிரிப்பை வர வச்ச நான் ரொம்ப லக்கி , தேங்க்யூ. இந்த மாலை ரொம்ப இனிமையானதா எனக்கு மாறிப்போச்சி. இங்க ஒரு சிக்னேச்சர் காக்டெயில் ரொம்ப ஃபேமஸ் , நான் ஆர்டர் பண்ணட்டுமா ப்ளீஸ் என்றேன்.

ஷ்யூர்னு சொல்லி சிரிச்சா.

ஆர்டர் பண்ணி ரெண்டு பேரும் குடிச்சோம்.

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி , டேன்ஸ் ஃப்ளோர் போலாமான்னேன். இடது கையை எடுத்து நீட்டினா . அதை ஸ்டைலா பிடிச்சி டேன்ஸ் ஃப்ளோர் கூட்டிட்டு போனேன். ரெண்டு பேரும் டேன்ஸ் ஆடினோம்.

இந்த கதையை கேட்டுக்கொண்டே சிண்டிரியா பின்னால் வந்து நின்றதை விதேஷ் கவனிக்கவில்லை.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

நாள் 12

நாள் 13

செவ்வாய், 21 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon