மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 12)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள்  12)

ஷமித்ராவும் சந்தனும் பார்ட்டி நடக்கும் லானுக்கு வந்தனர். சிலர்தான் வந்திருந்தனர். விதேஷ் டிரிங்க்ஸை அழகியல் கலந்து அடிக்கிக்கொண்டு இருந்தான். இன்னொருவன் உதவிக்கொண்டு இருந்தான். ஷமித்ராவைப் பார்த்து, ‘ஹீ ஈஸ் மை பெஸ்ட் ஃபிரெண்ட், சவீந்தர்’என்று அறிமுகப்படுத்தினான்.

சவீந்தர், திரும்பி சந்தனை லேசாக அணைத்து முகமன் கூறிவிட்டு, ஷமித்ராவையும் அணைக்க வந்தான். ஷமித்ரா சடுதியில் கையை நீட்டிவிட்டாள். அப்போதும் கையை லாகவமாகப் பற்றி மென்மையாக முன்னே இழுத்து தன்மையாக ஓர் அணைப்பு அணைத்து விடுவித்தான்.

ஒரு சின்ன ஆட்டோ உள்ளே நுழைந்தது .சீருடை அணிந்த இருவர் ஆட்டோவில் இருந்து பொருட்களை எடுத்து புல் தரையில் அடுக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே அது ஒரு பஃபே சிஸ்டமாக உருப்பெற ஆரம்பித்தது. ஒரு கிரில் அடுப்பும், ஒரு தாவாவும் ரெடி செய்தனர்.

சாந்தவியைக் காணோம்.

‘எங்கேண்ணா சாந்தவி?’என்று கேட்டாள் ஷமித்ரா.

‘தெரியலையே... உன்னைத் தேடிட்டுதான் உள்ளே போனா’ என்றான்.

‘ஹேய்….இங்க வந்துட்டீயா? உன்னை தேடிக்கிட்டு உள்ளே போனா, மெஸ் மாதிரி இருக்கு வீடு, எங்கயோ போயிட்டேன். ஹேய் விதேஷ், நீ ஒரு ஆள் இருக்குறதுக்கு எதுக்கு இவ்ளோ ரூம்ஸ்’ என்றாள் சாந்தவி.

‘நான் மட்டும் இல்லை. இனிமே சந்தனும் ஷமித்ராவும் இங்கதான் தங்கப்போறாங்க’என்றான் விதேஷ்.

‘ஓ…நிஜமாவா? நானும் இங்கயே வந்துடறேனே’என்று செல்லமாக கேட்டுவிட்டு விதேஷிடம் சென்று ஒட்டிக்கொண்டாள் சாந்தவி.

சந்தனும் ஷமித்ராவும் தயார் ஆகி வருவதற்கு சற்றுநேரம் முன்னர்தான் சாந்தவி வந்திருக்க வேண்டும். அதற்குள்ளாகவா விதேஷிடம் இவ்வளவு நெருங்கி இருக்க முடியும் என ஆச்சர்யமாக இருந்தது ஷமித்ராவுக்கு.

வீட்டினுள் இருந்து ஒருவன் ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிஃபைர் என ஆடியோ ஐட்டங்களாக எடுத்து வந்து அடுக்கிக்கொண்டு இருந்தான்.

‘என்னண்ணா இது?’என்றாள் ஷமித்ரா.

‘கம் ஹியர்’என்று அவனை அழைத்தான் விதேஷ்.

‘ஹீ ஈஸ், நீர்த்தி. சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல். அப்பப்போ எனக்கு ஃப்ரீ லான்ஸிங்கா டிஸ்க் ஜாக்கியா இருப்பார். மை பிரைவேட் டிஸ்க் ஜாக்கி’என்றான்.

‘ஹாய்’என்று எல்லோருக்கும் கை கொடுத்தான் நீர்த்தி.

‘பஃபே சிஸ்டத்தைப் பார்த்து, எத்தனை பேருண்ணா பார்ட்டிக்கு வராங்க? எதுக்கு இவ்ளோ பெரிய அரேஞ்ச்மெண்ட்ஸ்’ என்று கேட்டாள் ஷமித்ரா.

‘இது ஒண்ணும் பெரிய அரேஞ்மெண்ட்ஸ் இல்ல ஷமித்ரா. நான் தனியா குடிக்கும்போதே, நீர்த்தியை வர வச்சுடுவேன். அவன் பாட்டுக்கும் ரேண்டமா ப்ளே பண்ணிட்டே இருப்பான். நைட் 3 மணி ஆனாலும் விடாம ப்ளே பண்ணுவான். அப்புறம் இங்கயே தூங்கிட்டு, காலைல வேலைக்குப் போயிடுவான். அதேமாதிரி தனியா குடிக்கறதுக்கே…’என்று சொல்லிய விதேஷ், கை தட்டி உணவு ரெடி செய்து கொண்டிருந்த ஆளை அழைத்தான்.

அவன் அருகே வந்ததும், ‘இவர்தான் ஜேம்ஸ் கிருஷ்ணன்’என்று அறிமுகப்படுத்தி, ‘சொல்லுங்க, நான் தனியா தண்ணி அடிச்சா என்னா செய்வேன்’என்றான்.

‘சார், எனக்கு போன் பண்ணிடுவாரு. நான் ஐட்டத்தை எல்லாம் வாங்கிட்டு கிளம்பி வந்துடுவேன். நீர்த்தியும் பாட்டு போட்டுட்டு இருப்பாரு. சார் தண்ணி அடிக்க அடிக்க, சிக்கன், மீன் இதெல்லாம் ஃப்ரெஷ்ஷா கிரில் பண்ணி குடுத்துட்டே இருப்பேன். விதவிதமா சாலட்டும் சாப்புடுவாரு. மூணு ரவுண்ட் போனதும் எங்களையும் குடிக்கச் சொல்லிடுவாரு. லைட்டா குடிச்சிட்டே வேலை பார்ப்போம். சார் தூங்கப் போனதும் நாங்களும் தூங்கிடுவோம்’ என்றான்.

ஒரு ஆளுக்கா இவ்ளோ லந்து என்று சந்தன் நினைத்துக்கொண்டு இருக்கையில்,

‘அப்பப்ப, யாராச்சும் பொண்ணுங்க வந்து டான்ஸ் ஆடிட்டும் போவாங்க’என்றான் ஜேம்ஸ் கிருஷ்ணன்.

ஷமித்ராவும் சந்தனும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, டான்ஸா என்று கேட்டு விதேஷை இடுப்பில் செல்லமாக குத்தினாள் சாந்தவி.

சிலர் காரை உள்ளே பார்க் செய்வது தெரிந்தது.

‘எத்தனை பேர் வராங்கன்னு முக்கியம் இல்ல. யார் வராங்கன்றதுதான் முக்கியம்’என்று விதேஷ் சொல்லிவிட்டு ஒரு கேப் விட்டான்.

சில செகண்டுகள் கழித்து சொன்னான், ‘ஆர்த்தி ஸிண்ட்ரியா வரா...’

ஆர்த்தி ஸிண்ட்ரியா வளர்ந்துவரும் ஒரு அல்ட்ரா மாடர்ன் நடிகை.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

நாள் 11

ஞாயிறு, 19 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon