மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 18 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 11)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் - 11)

சாந்தவியிடம் பேசி முடித்துவிட்டு கொஞ்சநேரம் தூங்கினார்கள் சந்தனும் ஷமித்ராவும். மாலை எழுந்து வார்ம் வாட்டரில் ஒரு குளியல் போட்டார்கள். அந்த அறையில் ஒரு பாத் டப் இருந்தது. ஷமித்ரா அதில் நீர் நிரப்ப ஆரம்பித்தாள்.

‘ஏய், குட்டிமா, இப்ப சென்னையில பயங்கரமா தண்ணி பிரச்னையா இருக்கு, இப்ப போய் பாத் டப்ல தண்ணி ரொப்பறயே’ என்றான் சந்தன்.

‘ஏய், சமூகப் போராளி, எப்பவாச்சும்தான் பாத் டப் வாய்ப்புக் கிடைக்கிது. இதுல குளிப்பதே ஒரு அலாதி சுகம். இப்ப மூட் அவுட் பண்ணாதே, ஒரு வாரம் கார்ல போகாம பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல போய் ஈக்குவல் பண்ணிக்கலாம்’ என்ற ஷமித்ரா ஹெட் கேப் போட்டுக்கொண்டு பாத் டப்புக்குள் விழுந்தாள்.

சந்தன் குளித்து முடித்துவிட்டு, நன்றாக துவட்டிக்கொண்டான்.

‘சரி, நான் வெளிய போய் ரெடியாகறேன், நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா’ என்றான்.

முழுக்க முழுகி இருந்த ஷமித்ரா, எழுந்து பாத் டப்பில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். ‘ஏண்டா குடிகாரப் பயலே , பார்ட்டிக்கு இப்பிடியா அலைவ?’ என்று கேட்ட ஷமித்ரா, அவனை அழைத்தாள்.

அவளருகே வந்த சந்தன், அவளின் கன்னத்தைக் கிள்ளி, ‘கரெக்டா பார்ட்டி டைமுக்கு போய் குடிப்பது நல்லாவா இருக்கும்? கொஞ்சம் சீக்கிரம் போய் அரேஞ்ச் பண்றதுல ஹெல்ப் பண்ணப்போறேன்’ என்றான்.

தண்ணீரை அள்ளி அவன்மேல் அடித்த ஷமித்ரா, ‘வாடா என் அழகு காதலா’ என இழுத்தாள். முழுக்க நனைந்த சந்தனுக்கு லேசாக ஆசை துளிர்விட்டது. மனைதையும் உடலையும் இணைக்கும் உயிர்நாடியும் விழித்துக்கொண்டு ஆட்டம் போட்டன.

அவனைத் தள்ளிவிட்ட ஷமித்ரா, ‘கொஞ்சம் லவ்வபிளா குளிக்க முடியாதா ? லவ், ரொமான்ஸ், கேரிங்-னு எவ்ளோ இருக்கு’ என்றாள்.

தொப்பென்று ஷமித்ரா மீது சரிந்தான்.

அவனை தட்டிக்கொடுத்தாள் ஷமித்ரா.

‘நான் என்னடீ செய்வேன் ? நான் உன்னை குழந்தைபோல கொஞ்சணும்னுதான் பாக்கறேன். எனக்கே தெரியாம மனசு எங்கெயோ போயிடுது. சாரி டீ’ என்றான்.

‘சரிடா பேபி… கட்டிக்கோ’ என்றாள்.

‘இதுக்கெல்லாம் நான் ரெஸ்பான்ஸிபிலிட்டி இல்ல. இதோ இவன்தான் பொறுப்பு’ என்று சொல்லிச் சிரித்தான்..

‘ஷமி’, ‘ஷமி’ என்று விதேஷ் கதவைத் தட்டி கூப்பிடுவது பாத்ரூமில் கேட்டது. சந்தன் பதறி எழுந்தான். ஷமித்ரா அவனை இழுத்து அணைத்துக்கொண்டு, ‘ஏண்டா டென்ஷன் ஆவற? ரத்ததான முகாமா நடக்குது? சாரயம் குடிக்கத்தானே போறீங்க? அவசரப்படாதே’ என்று கிசுகிசுத்தாள்.

‘தோ வரேண்ணே’ என்றாள் சத்தமாக.

‘சாந்தவி வந்து இருக்கா, சீக்கிரம் வா ஷமி’ என்றான் விதேஷ்.

இப்போது சந்தனுக்கு தடையேதும் சொல்லவில்லை, கண்கள் செருகிக் கிடந்தாள் ஷமித்ரா.

*

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் 8

நாள் 9

நாள் 10

சனி, 18 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon