மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 16 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 9)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 9)

ஓவியம் : சசி மாரீஸ்

டின்னர் முடித்து மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்காக, காரை எடுத்து வரும்படி பணித்தான் விதேஷ். அதற்குள் ஓரமாக ஒதுங்கி சிகரட் பற்றவைத்தான் சந்தன்.

விதேஷும் சந்தன் அருகே சென்று, இரண்டு விரல்களை ஆட்டி ஒரு சிகரட் கொடு என்பதுபோல சைகை செய்தான்.

‘ஓ…நீங்களும் ஸ்மோக் பண்ணுவீங்களா?’

‘நிறைய பண்ணிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு கட்டத்துல விட்டுட்டேன். இப்போ அப்பப்போ தோணும்போது அடிக்கிறது, ரொம்ப ரேர்’

சிகரட் எடுத்து பற்றவைத்த விதேஷ் , கண்ணை மூடி இழுத்துவிட்டான். ‘சிகரெட்டுக்கும் பொண்ணுங்களுக்கும் ஒத்துவராது’ என்று கூறி சிரித்து கண்ணடித்தான்.

கார் வந்து காத்திருந்தது. மூவரும் செல்கையில், ‘ஷமி இந்த சாந்தவி உன் ஃபிரண்டுதானே’ என்றான் விதேஷ்.

‘ஆமாண்ணா’ என்றாள் ஷமித்ரா. ‘உனக்குத்தான் முன்னமே தெரியுமேண்ணா’ என்றும் சொன்னாள்.

‘தெரியும், ஜஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிக்கக் கேட்டேன். அவ மெசேஜ் அனுப்பி இருக்கா, என்னை நேரில் பாக்கணுமாம்’ என்று சொல்லிச் சிரித்தான்.

அப்போதுதான், ஷமித்ராவுக்கு ஞாபகம் வந்தது. சாந்தவி மெசேஜ் நோட்டிஃபிகேஷனில் சற்றுமுன்பே காட்டியது. பேச்சு சுவாரசியத்தில் மறந்துவிட்டாள். எடுத்துப் பார்த்தாள். உங்க அண்ணனை நேரில் சந்திக்கணும், ஹெல்ப் மீ என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

கார் விதேஷ் வீட்டுக்குச் சென்றது.

‘கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம். ஈவ்னிங் டீ குடிக்க மீட் பண்ணுவோம்’ என்ற விதேஷ் இருவருக்கும் விசாலமான அந்த அறையைக் காட்டினான். ‘ஃப்ரீயா எதை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோங்க’ என்றபடி அவனது அறைக்குச் சென்றான்.

சந்தன் அறைக்குள் நுழைந்ததும் ஷமித்ராவை கட்டிப் பிடித்தான்.

‘டேய், சாப்பிட்டு கொஞ்சநேரம் கூட ஆகலை, எப்ப ரொமான்ஸ் பண்றதுன்னு ஒரு அளவே இல்லையா? வயிறு ஃபுல்லா இருக்கு’ என்ற ஷமித்ரா விலகிக் கொண்டாள்.

‘இப்ப இப்பிடிச் சொல்லு, கொஞ்ச நேரம் கட்டிப்பிடிக்கலைன்னா, முத்தம் குடுக்கலைன்னா, லவ்வே இல்லையா? என் மேல அட்ராக்‌ஷனே இல்லையான்னும் கேப்பியேடீ’ என்றான் சந்தன்.

‘அதுவும் சொல்வேன்தான், இதுவும் சொல்வேன். நீதான் பாத்து பக்குவமா நடந்துக்கணும். அதுக்காக மெஷின் மாதிரி கட்டிப்பிடிக்காதடா’ என்றாள் ஷமித்ரா.

ஷமித்ரா தன் மேலாடையைக் கழட்டும்போது கதவு தட்டப்பட்டது.

திறந்தால், விதேஷ் ஷாட்ஸோடு நின்றுகொண்டிருந்தான். கையில் இரண்டு ஷார்ட்ஸ் வைத்திருந்தான்.

‘போட்டுக்கோங்க’ என்று கொடுத்தான். வாங்கிக்கொண்டதும், ‘ஈவ்னிங் நம்ம வீட்ல ஒரு பார்ட்டி இருக்கு. ஃபிரண்ட்ஸ் வராங்க. நீங்களும் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடி ஆயிடுங்க’ என்றான் விதேஷ்.

‘ஓ…ஓக்கேண்ணா’ என்று ஷமித்ரா சொன்னதும்,

‘அப்புறம் உன் ஃபிரண்டு, சாந்தவியை பார்டிக்கு இன்வைட் பண்ணிடறியா’ என்று கேட்டான்.

‘ஏண்ணா, அவள கூப்பிடணுமா’ என்று இழுத்தாள் ஷமித்ரா…

‘ஜஸ்ட் கால் ஹர்’ என்று சொல்லிவிட்டு அலட்சியமாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தான் விதேஷ்.

நாள் 1

நாள் 2

நாள் 3

நாள் 4

நாள் 5

நாள் 6

நாள் 7

நாள் - 8

வியாழன், 16 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon