மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 7)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் - 7)

ஓவியம் : சசி மாரீஸ்

‘ஏன் கேக்கற’ என்று, சந்தன் ஒருமையில் கேட்டதும், ஷமித்ரா நிலவிய இன் கம்ஃபர்டபிலிட்டியை புரிந்துகொண்டாள். அந்த நிலைமையை மாற்ற எண்ணி, ‘எந்த ரெஸ்டாரண்ட் அண்ணா போறோம்’ என்றாள்.

விதேஷ் ஒரு 5 ஸ்டார் ரெஸ்டாரண்ட் பெயரைச் சொல்லி, அங்கே தாய் ஃபுட் நன்றாக இருப்பதாகவும் அங்கே போவதாகவும் சொன்னான். கொஞ்சநேரம் அமைதியாகச் சென்றது. கார் வாலட் பார்க்கிங்கில் கொடுக்கப்பட்டது.

மூவரும் உள்ளே செல்ல முற்படுகையில் , சந்தன் ஒரு போன் செய்துவிட்டு உள்ளே வருவதாகச்சொல்லி கழண்டு கொண்டான்.

அப்படியே ஒதுங்கி, ஒரு சிகரட் பற்றவைத்தான்.

ஷமித்ராவும் விதேஷும் ரெஸ்டாரண்ட் சென்று அமர்ந்தனர். மெனுவைப் பார்த்துக்கொண்டே, ‘அண்ணா அந்த விண்மிதா என்னா ஆனா? சீக்ரெட் கேமரா பாத்துட்டு நீ என்னா பண்ண’ என்றாள்.

விதேஷ் கண்களை விரித்து ஷமித்ராவைப் பார்த்தான். ஒரு சின்ன குறும்புப் புன்னகை முகத்தில் மலர்ந்தது.

முதல்ல அந்த வீடியோவைப் பத்தி சொல்லாம, அவகிட்ட விசாரிச்சேன். ‘அப்படில்லாம் ஏதும் இல்லை, என் உயிரே நீதான்’ என்று சாதிச்சா.

‘ம்ம்’

கடுப்பாயி வீடியோவை லேப்டாப்பில் பிளே செய்தேன்.

‘ம்ம்’

‘பாத்தவ, அப்படியே போய் சுவத்துல முட்டிக்கிட்டா. கிச்சன் கத்தியை எடுத்து கழுத்துல வச்சி அறுத்துக்கப் பாத்தா’

‘அய்யோ’

நான் போய் தடுத்து, கத்தியைப் பிடுங்கி, ‘சும்மா சீன் போடாதே , அதான் அடுத்தவன்கூட படுத்து எஞ்சாய் பண்ணிட்ட இல்ல? அதும் என் வீட்ல, என் பெட்ல. சோ, இப்ப நான் சொல்றத கேளு’ன்னு சொன்னேன்.

‘ஏண்ணா, அதான் அவ வேற ஒருத்தன்கூட இருக்கான்னா துரத்தி விட வேண்டியதுதானே?’

‘அதெப்படி அப்படி சும்மா விட முடியும்? லட்சக்கணக்கில் செலவு பண்ணி இருக்கேன் இல்ல?’

‘அதுக்காக?’

‘அவளோட ஃபேஸ்புக் ஐ.டி. அண்ட் பாஸ்வேர்டு கேட்டேன். குடுக்க மாட்டேன்னு சொன்னா’

‘ம்ம்ம்’

‘நீ குடுக்காட்டி, இந்த வீடியோவ உன் அப்பா, அம்மாவுக்கு அனுப்பிடுவேன்’னு சொன்னேன்.

‘ம்ம்’

‘வேற வழியில்லாம எல்லா க்ரெடென்ஷியலையும் ஷேர் பண்ணா’

‘ஓஓ...’

‘உள்ள போய் பாத்தா…எக்கச்சக்க பேர்கூட ஃப்ளிர்ட், சாட் . சிலபேர்கூட ஓவர் செக்ஸி சாட்’

‘ம்ம்’

‘ஒக்காந்து கணக்குப் போட்டேன். 30 லட்சத்துக்குமேல இவளுக்கு செலவு பண்ணியிருப்பேன். 50 சதவிகிதம்கூட விட்டுடறேன். மீதி 15 லட்சத்தை செட்டில் செஞ்சிட்டு போடீன்னு சொல்லிட்டேன்’

‘அவகிட்ட பணம் இருக்குமா?’

‘இன்ஸால்மெண்ட் கேட்டா’

‘குடுத்தியா?’

‘ஒரு வருஷம் டைம் குடுத்தேன்’

‘ஓ…ஒரு வருஷம் டைம் குடுத்து துரத்திட்டியா?’

‘இல்ல, அதுவரைக்கும், அவ ஈ-மெயில் ஐ.டி., ஃபேஸ்புக் ஐ.டி., எல்லாம் என்கிட்டதான் இருக்கும். கூப்பிடும்போது நேரில் வரணும்னு சொல்லியிருக்கேன்’

‘அவ பணம் குடுத்து முடிச்சதும், அவளை விட்டுடுவியா அண்ணா?’

‘அது எப்பிடி விட முடியும்?’

‘என்னண்ணா செய்வ?’

‘அந்த வீடியோவ அவங்க அப்பா, அம்மாவுக்கு அனுப்புவேன், அவ ஃபேஸ்புக் பேஜ்லயே போடுவேன். என்னால துரோகத்தை மன்னிக்க முடியாது’ என்று, விதேஷ் கூறிக்கொண்டிருக்கையில் சந்தன் கேட்டுக்கொண்டே வந்து அமர்ந்தான்.

செவ்வாய், 14 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon