மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 5)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 5)

ஓவியம் : சசி மாரீஸ்

கார் விதேஷின் வீட்டை நெருங்கியதும், வெளியிலேயே எங்காவது பார்க் செய்ய முடிவு செய்தான். ஷமித்ரா இறங்கிக்கொண்டாள். விதேஷின் வீட்டு கேட் அருகே சென்றதும், கேட் தானாக திறந்துகொண்டது. ஷமித்ரா, ‘காரை உள்ளயே பார்க் பண்ணிடு’ என்று ஸ்பீக்கரில் விதேஷின் குரல் ஒலித்தது.

ஷமித்ரா, சந்தனிடம் காரை உள்ளேயே பார்க் செய்யும்படி சைகையில் காட்டினாள்.

கார் பார்க் செய்யப்பட்டதும் ரிமோட் கேட் மூடிக்கொண்டது. மிகப்பெரிய கார் பார்க்கிங், பெரிய லான். லானில் நடந்து வீட்டை நோக்கிச் சென்றார்கள். மெயின் கதவைத் திறந்துகொண்டு விதேஷ் வெளியே வந்தான். வாழ்வின் நடுவில் ஏறிய பணக்காரத்தனம் முகத்தில் வழிந்தபடி இருந்தது. 3999 ரூ மதிப்புள்ள ஜாக் அண்ட் ஜோன்ஸ் ஷார்ட்ஸும், 1999 மதிப்பிள்ள சீலியோ டி ஷர்ட்டும் அணிந்திருந்தான். மெல்லிய எட் ஹார்டி கூலர்ஸ் அலட்சியமாக மூக்கில் அமர்ந்திருந்தது.

‘ஏய் ஷமி...’ என்று பெரிதாக அழைத்தபடி ஷமித்ராவை மென்மையாக அணைத்துக் கொண்டான். ‘அப்புறம் எப்பிடி இருக்க ? லைட்டா குண்டாயிட்ட போலருக்கு’ என்று சொல்லிச் சிரித்து வெடித்தான் விதேஷ்.

‘ஹீ ஈஸ் சந்தன்’ என்று ஷமித்ரா அறிமுகப்படுத்த,

‘ஹாய் சந்தன்’ என்று சந்தனின் கையை திடமாக பற்றிக் குலுக்கி, ‘ப்ளீஸ் கம்’ என்று வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

‘தென், வாட்ஸ் ஹேப்பனிங்?’ என விதேஷ் நடந்துகொண்டே கேட்டதற்கு,

‘உன் லேட்டஸ்ட் போஸ்ட் பாத்தேண்ணா’ என்று சிரித்தபடியே கூறினாள் ஷமித்ரா.

‘ஹ ஹா …அதுவா சும்மா ஃபன்னியா போட்டேன். பட் நல்ல ஆஃபர் வந்தா, போஸ்ட் சீரியஸ் ஆயிடும்’ என்று மீண்டும் வெடித்தான் விதேஷ்.

‘ஏண்ணா? கேர்ள் ஃபிரண்ட் யாரும் செட் ஆகலையா ? விண்மிதா என்ன ஆனா?’

‘விண்மிதாவா? அவ சரியான திருடி ஷமி. அது தெரியாம அவளுக்கு ரொம்ப இடம் கொடுத்து இருந்தேன். இன் ஃபேக்ட் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவே எடுத்துட்டேன், நான் கூட ஒரு தடவை ஊருக்கு கூட்டிட்டு[ போய் அப்பா, அம்மாகிட்ட கூட இண்ட்ரோ குடுத்தேன்னு உன்கிட்ட சொன்னெனே?’

‘ஆமா , அதான் கேட்டேன்’

‘வீட்ல இண்ட்ரோ குடுத்துட்டேன். அவங்க வீட்டுக்குப் போய் அவ அப்பா அம்மாவையும் மீட் பண்ணிட்டு வந்தேன். அவளை இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டேன். என்னோட எல்லா அக்சஸும் அவளுக்கு குடுத்துட்டேன். கிரடிட் கார்ட், நெட் பேங்கிங், இந்த வீடு, கார், என் ஆஃபீஸ் எல்லா அக்சஸும் குடுத்தேன்’

‘சரி…’

‘நான் வெளியூர் போயிருந்தப்ப, அவளோட பழைய பாய் ஃபிரண்டை இந்த வீட்டுக்கே வர வச்சி, என் பெட்லயே ஹேட் செக்ஸ்’

‘ஓஹ், உனக்கு எப்பிடிண்ணா தெரிஞ்சிது?’

‘ஹாஹ்ஹா, நான் தான் சீக்ரட் கேமரா வச்சிருக்கேனே !அதுல மாட்டிக்கிட்டா’

‘ஓ…அப்பிடியா ? பழைய பாய் ஃபிரண்டை எல்லாம் மறந்துட்டேன்னு உன்கிட்ட சத்தியம் பண்ணதா சொன்னியேண்ணா?’

‘அதான், ஒரு நாள் அவளோட சாட்டை ஹேக் பண்ணிப் பாத்துட்டு கேட்டதுக்கு, கால்ல வுழுந்து அழுதா. அவங்களை எல்லாம் மறந்துட்டேன். ஜஸ்ட் சாட்டிங் மட்டும்தான், இனிமே அதும் பண்ண மாட்டேன்னு கதறி அழுதா. பாத்தா பெட்ரூம் வரைக்கும் கூட்டி வந்துருக்கா’

‘அப்புறம் என்னண்ணே பண்ண? அவளை துரத்திட்டியா?’

‘சும்மா துரத்திடுவேனா? நான் என்ன கேனையனா?’

ஞாயிறு, 12 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon