மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 மா 2017

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 4)

அராத்து எழுதும் உயிர் மெய் தொடர் - 2 (நாள் 4)

ஓவியம் : சசி மாரீஸ்

விதேஷுக்கு உடனே கால் அடித்தாள் ஷமித்ரா.

‘ஹலோ ஷமி, ஹௌ ஆர் யூ? எங்க இருக்க?’

‘சென்னைலதான் இருக்கேண்ணா, நீ எப்பிடி இருக்க?’

‘ஃபைன் ஷமி. நேத்துதான் அப்பா கால் பண்ணாரு, உன்னைப் பத்தி கேட்டாரு. ஷீ ஈஸ் ஃபைன்னு சொல்லிட்டேன். நீ ஒரு தடவை அப்பாவுக்கு கால் பண்ணிடேன்’

‘ஷ்யூர், பண்ணிடறேன். நீ சென்னைலயாண்ணா இருக்க?’

‘ஆமாம் ஷமி. என்ன விஷயம்? எனி ஹெல்ப்?’

‘ம்ம்ம்... ஆமாண்ணா. நான் என் வீட்டை காலி பண்ணிட்டேன். இப்ப ஹாஸ்டல்லதான் இருக்கேன். என்னோட திங்க்ஸ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு உன் வீட்ல வச்சிக்கலாமான்னு கேக்கலாம்னுதான் கால் பண்ணேன்’

‘ஏய், கமான். இதெல்லாம் கேக்கணுமா? வச்சிக்கோ…நோ பிராப்ளம்’

‘தேங்க்ஸ்ணா… இன்னும் 2 மணி நேரத்துல வீட்டுக்கு வர்றேன். நீ இருப்பியா?’

‘இருப்பேன், வா. லஞ்ச்க்கு வெளில போலாமா?’

‘போலாம். நான் ஒரு ஃபிரண்டோட வரேண்ணா. வந்து இன்றொடியூஸ் பண்றேன்’

‘ஓக்கே… பை பை’

‘பைண்ணா….’

விதேஷிடம் பேசிவிட்டு, பேக் செய்யும் ஆட்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு, சந்தனிடம் வந்தாள் ஷமித்ரா.

‘இப்ப என் திங்க்ஸையெல்லாம் பேக் பண்ணி, என் அண்ணன் வீட்ல கொண்டு போய் போட்டுடப் போறேன். தேவையான பொருளை மட்டும் ஹாஸ்டலுக்கு எடுத்துட்டுப் போயிடறேன். உன்னையும் கூட்டிட்டு வர்றதா அண்ணன்கிட்ட சொல்லியிருக்கேன். ஸோ, நீயும் ஸ்மார்ட்டா கிளம்பு’ என்றாள்.

‘என்னாடி, திடீர்னு அண்ணன்கிட்ட அறிமுகப்படுத்தறேன்னு சொல்ற? சரி, ஓக்கே. எனக்கென்ன ஜஸ்ட் 30 மினிட்ஸ்ல ரெடி ஆயிடுவேன், அதை விடு. நீ ஹாஸ்டலுக்குப் போற, உன் பொருளையெல்லாம் அண்ணன் வீட்ல வைக்கிற, ஓக்கே. எனக்கு என்னா வழி? நானும் உன் கூட ஹாஸ்டல்ல வந்து தங்கிக்கிறதா?’

‘ம்ம்...வாடா…ஆசையைப் பாரு. 30 மினிட்ஸ்ல கிளம்புற வேலையெல்லாம் வேணாம். ஒழுங்கா டிரிம் பண்ணிக்கிட்டு, ஹேர் வாஷ் பண்ணிக்கிட்டு, ஹேண்ட்ஸம்மா ரெடி ஆயி வரணும் புரியிதா?’

‘ஏண்டி, என்னை மாப்பிள்ளைன்னு அண்ணன்கிட்ட சொல்லப் போறியா?’

‘அதெல்லாம் அவனே புரிஞ்சிப்பான். நீ ஒழுங்கா ரெடி ஆயி வா’

‘டன் குட்டிமா. செமையா ரெடி ஆயி வர்றேன். எனக்கென்ன வழி? அதைச் சொல்லு’

‘அண்ணனை மீட் பண்ணதுக்கு அப்புறம் சொல்றேன்… ஓடு ரெடி ஆயிட்டு வா’

பேக்கர்ஸ் ஆட்களுக்கு அண்ணனின் விலாசத்தைக் கொடுத்தாள். ‘அங்க வந்து இறக்கிடுங்க’ என்றாள்.

லைட்டாக தன்னை அலங்கரித்துக் கொண்டு தயார் ஆனாள். சந்தன் தயாராக வந்ததும் ‘போலாம்டா, போற வழியில அண்ணனுக்கு எதாவது வாங்கிக்கலாம்’ என்று சொன்னாள்.

‘அண்ணன் தண்ணி அடிப்பாரா ஷமி?’

‘விதவிதமா குடிப்பாரு, ஏண்டா?’

‘இல்ல என்கிட்ட, ஒரு ஸ்பெஷல் எடிஷன் கோனியாக் இருக்கு. அதை எடுத்து அவருக்கு குடுத்துடலாமா?’

‘குடுக்கலாம், அவரு கொஞ்சம் பெரிய இவருபோல பிஹேவ் பண்ணுவாரு. இது எவ்ளோ விலை இருக்கும்?’

‘18 ஆயிரம் ரூபாய் இருக்கும்டீ . அதான் நானே ரொம்ப நாளா குடிக்காம வச்சிருக்கேன்’

‘அப்ப குடுக்கலாம். குஷி ஆயிடுவாரு. நீயே குடு’

ஏணியில் ஏறி பரணில் மறைத்து வைத்திருந்த அந்த கோனியாக் போத்தலை எடுத்தான் சந்தன்.

‘இதைக் குடுத்து மச்சானை மஜா பண்ணிடலாம்’ என்றுகூறி கண்ணடித்தான் சந்தன்.

இருவரும் காரில் ஏறி விதேஷ் வீட்டை நோக்கிச் சென்றனர்.

காரில் சென்று கொண்டிருக்கையில் விதேஷ், கம்பேனியன் கேட்டு போட்டிருந்த ஸ்டேட்டஸை, சாந்தவி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷமித்ராவுக்கு அனுப்பி வைத்திருந்ததைப் பார்த்தாள் ஷமித்ரா.

சனி, 11 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon