மோடி தியானம் நேரடி ஒளிபரப்பு: தேர்தல் ஆணையருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்!

Published On:

| By Selvam

மூன்று நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

இந்தநிலையில், மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் மே 30-ஆம் தேதி நிறைவடைகிறது.

8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்தசூழலில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் மே 30-ஆம் தேதி தியானம் செய்ய உள்ளார்.

இது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பிரதமரின் தியான நிகழ்ச்சியை கவர் செய்வார்கள். அதிலும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இது பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு பிரச்சாரமாக இருக்கும்.

அன்றைய நாள் முழுவதும் மோடி லைம்லைட்டில் இருப்பார். இது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற தேர்தல் நன்னடத்தை விதியை மீறுவதாகும்.

ஆகவே, பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை அச்சு, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லியில் வாட்டி வதைத்த வெயில்: திக்குமுக்காடிய பொதுமக்கள்!

கிணற்றில் விழுந்த குட்டி யானை:11 மணி நேரம்… போராடி மீட்ட வனத்துறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share