பறவைகளின் தற்கொலை பிரதேசம்!

Published On:

| By Balaji

(

பறவைகளின் தற்கொலை பிரதேசமாக அசாம் மாநிலத்தின் ஜதிங்கா பகுதி அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் பகுதிக்கு வரும் காக்கைகள் திடீரென வெள்ளை நிறமாக மாறுவதும், கண்பார்வை பாதிக்கப்பட்டு செத்து விழுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது பறவைகளின் தற்கொலை பிரதேசம் என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.

பறவைகள் இறப்பதற்கான காரணம் குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தபட்டுவருகிறது. இந்த நிலையில் இதேபோல் அஸ்ஸாமில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோல் போர்பாகியா என்ற கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் காகங்கள் திடீரென கருப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளை நிறமாகிக் கொண்டே இருந்திருக்கிறது. பிறகு இந்த நிறம் மாறிய நிலையில் காக்கைகளால் தொடர்ந்து பறக்க முடியாமல் போயிருக்கிறது. இதற்குக் காரணம் நிறம் மாற மாறக் கண்பார்வையும் பறிபோயுள்ளது. இந்த நிறமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே காக்கைகள் கொத்து கொத்தாக செத்து விழுந்திருக்கின்றன. இது குறித்து காரணங்கள் தெரியவில்லை.

தற்போது இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share