ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவான கொரில்லா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கீ. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்த இப்படம் டெக்னோ திரில்லர் ஜானரைச் சேர்ந்த படமாகும். கடந்த ஒரு வருட காலமாக ரிலீஸுக்கு போராடிக் கொண்டிருந்த கீ, ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் ரிலீஸான சில நாட்களிலேயே திரையரங்கங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஜீவாவின் அடுத்த படமான கொரில்லா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி என்டர்டெயினர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஒரு சிறப்பம்சமாக நிஜ சிம்பன்சியும் படத்தில் நடித்துள்ளது. குழந்தைகளை ஈர்க்கும் கொரில்லா வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டான் சாண்டி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://minnambalam.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)
**
.
.,”





