கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சுண்டல்

Published On:

| By Balaji

நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் உணவு தானியங்களில் சிறப்பான இடத்தைப் பிடிக்கிறது பச்சைப்பயிறு. சுண்டல் வகைகளில் பச்சைப்பயிறு சுண்டலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிக சத்துகள் கொண்ட இந்த பச்சைப்பயறு சுண்டலைச் செய்து அசத்துங்கள்.

**என்ன தேவை?**

பச்சைப்பயறு – ஒரு கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்த் துருவல் – கால் கப்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

குக்கரில் சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து பச்சைப்பயற்றைக் குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும். தண்ணீரை வடித்துவிடவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து சிவக்க வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பச்சைப்பயறு சேர்க்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இறக்கவும். சுவையும் சத்தும் நிறைந்த பச்சைப்பயறு சுண்டல் தயார்.

[நேற்றைய ரெசிப்பி: முட்டைப் பணியாரம்](https://minnambalam.com/k/2020/01/27/84)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share