மூன்றாண்டு முதுநிலை (எம்.டி) இயற்கை மருத்துவப் படிப்புக்கு, நாளை (செப்டம்பர் 3) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழகச் சுகாதாரத் துறையின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் நடத்தப்படும் இந்திய மருத்துவ படிப்புகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான முதுநிலை (எம்.டி) மேற்படிப்பிற்கான விண்ணப்பம், நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை, சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 30ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.