ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2015ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதன் பின்னணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதா என்ற அச்சம் தேர்வெழுதியவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெகுமாதங்களாக வெளியிடப்படாத எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்டு, இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பணி நியமனம் செய்யப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு?](https://minnambalam.com/k/1489303025)
