கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. justice yashwanth varma have one option
கடந்த மார்ச் 14ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உள்ளக விசாரணை குழு விசாரித்தது.
இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், அதில் நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
“இப்படி தன் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க நீதிபதி வர்மாவுக்கு முன் இருக்கும் ஒரே வழி ராஜினாமா செய்வதுதான்.
அவர் தனது கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். அப்படி செய்ததால் அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள் கிடைக்கும்.
இல்லையென்றால் எந்த சலுகைகளும் கிடைக்காமல் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்கிறார்கள்” நீதித்துறை வட்டாரத்தில்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். ஆனால் அவருக்கு எந்த பணியும் ஒதுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தகக்து. justice yashwanth varma have one option