’நீதி வெல்லும்’ : உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விஜய் பதிவு!

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் நீதி வெல்லும் என்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரூர் பெருந்துயரம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழுவையும், அரசு அமைத்த முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) சஸ்பெண்ட் செய்தது.

ADVERTISEMENT

எஸ்.ஐ.டி குழு அமைத்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பகக்த்தில், ‘நீதி வெல்லும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

முன்னதாக 27ஆம் தேதி கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த மூன்று நாள் கழித்து வீடியோ வெளியிட்டார் விஜய். அதைத்தொடர்ந்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த விஜய் தற்போது நீதி வெல்லும் என்று கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share