சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு

Published On:

| By Minnambalam Desk

Shrivastava CJI High Court

சென்னை உயர்நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா (மணிந்தர மோகன் ஶ்ரீவஸ்தவா) இன்று (ஜூலை 21) பதவியேற்று கொண்டார். Shrivastava

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு பதவி ஏற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஸ்ரீவஸ்தவாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

1964-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவர் ஸ்ரீவஸ்தவா. 2009-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். 2024-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்ரீவஸ்தவா பணி ஒய்வு பெறுகிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share