அதிமுக உரிமையியல் வழக்கு: நீதிபதி விலகல்!

Published On:

| By Kavi

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்தன.

அப்போது, 2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

2022ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த 2022 ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், ”ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது” என்று தீர்ப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்… ஏற்பாடுகள் என்னென்ன?

’அமரனின் கமாண்டிங் ஆபிஸரே!’ : 70ஐ தொட்ட கமல்… குவியும் வாழ்த்துகள்!

விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வரும் வீரர்கள் முழு விவரம் : யார் யாருக்கு டிமாண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share