ADVERTISEMENT

நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவி கோரிக்கை!

Published On:

| By Selvam

தெலுங்கு சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றம் கஸ்தூரியை நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில், கஸ்தூரிக்கு ஆட்டிஸம் பாதிப்புடன் கூடிய மகன் இருப்பதால் ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அவரை அணுக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் மனைவியும் சக்ஷம் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் இந்திய துணைத் தலைவருமான காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன்.

இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான். (Special Mother) எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.

ADVERTISEMENT

எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள்விடுக்கத் தோன்றுகிறது. ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு?: அமைச்சர் ரகுபதி பேட்டி!

“சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்” – திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share