”திருப்பரங்குன்றம் தூண்” மாடலில் தீபம் ஏற்றிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

Published On:

| By Mathi

G.R. Swaminathan

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “திருப்பரங்குன்றம் தூண்” மாடலில் அரோகரா சரண கோஷங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றினார்.

சென்னையில் தாரா பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சி மேடையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல் தூண் மாதிரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்றினார். அப்போது, “அரோகரா! திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா!” என சரணகோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இது சர்வே கல் அல்ல என நினைக்கிறேன். தம்முடைய பதவிக் காலம் இன்னும் நான்கரை ஆண்டுகாலம் உள்ளது; அதற்குள் தாம் தகுதி நீக்கம் செய்யப்படமாட்டேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், “இத்தகைய நிகழ்ச்சி தமக்கு சனாதன தர்மத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” என்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக மலை உச்சியில் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கினார். தமிழக அரசு, இத்தீர்ப்பை செயல்படுத்தவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.

ADVERTISEMENT

மேலும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மானத்தை திமுக , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்தது. இதனை சுட்டிக்காட்டி தம்மை தகுதி நீக்கம் செய்யமாட்டார்கள் என ஜிஆர் சுவாமிநாதன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share