நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார்: கொளத்தூர் மணி கடிதம்!

Published On:

| By Aara

கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில்  பக்தர்கள் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த மே 17 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் உள்ளது, ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி. அவர் ஜீவ சமாதியான நாளை அவரது பக்தர்கள் ஆறு நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவை ஒட்டி பிரம்மேந்திரர் கோவிலில் வேத பூஜைகள் நடைபெறும் நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வழிபாடுகள் நடந்து, நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடக்கும்,

சாப்பிட்ட பின் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வழிபடுகின்றனர். இந்த நிகழ்வுக்கு 2014-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தடையின் அடிப்படையில்… 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தடை விதித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில்,

“சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவருக்கு ஆன்மீக பலனைத் தரும் என்ற நம்பிக்கை, அந்தத் தனிப்பட்ட நபரின் ஆன்மீகத் தேர்வு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்… திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இன்று (மே 26) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

”28.04.2015 தேதியிட்ட W.P.(MD) 7068/2015 இல் தலித் பாண்டியன் தொடுத்த வழக்கில், நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் எஸ்.வேலுமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கரூர் மாவட்டம் நெரூரில் பக்தர்கள் எச்சில் இலைகளில் உருள்வதைத் தடை செய்தது.

பிறர் உணவு உண்டபின் மீதியுள்ள வாழை இலையில் உருள்வது, மனித மாண்புக்கும் நாகரீக சமுதாயத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டது.

இதேபோன்ற நிகழ்வை கர்நாடக மாநிலத்தில் உச்ச நீதிமன்றம் 2014 இல் தடை செய்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற,. உயர் நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்புகளுக்கு எதிராக, பிறர் உணவு உண்டபின், மீதியுள்ள வாழை இலையில் உருளும் நாகரீகமற்ற வழக்கத்தை மீட்டெடுத்திருக்கிறார் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

மதப் பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் உணவு சாப்பிட்டு விட்டு இலைகளில் மனிதர்களை உருட்டுவது அடிப்படை உரிமை என்று உயர்நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன மன்றங்கள் கருதக்கூடாது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கைகளின் உண்மையான நோக்கத்துக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல.

எனவே, எதிர் தரப்பினர் பதில் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் பொதுவாக வழங்கப்படும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

வெளிநாட்டு வேலை… தங்க முக்கோணத்தில் மாட்டிக்காதீங்க… -அரசு எச்சரிக்கை!

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… ‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்குக் காணிக்கை! -ஸ்டாலின் அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share