பன்னீருக்கு ஏப்ரல் 8 : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

Published On:

| By Kavi

தேர்தல் நடத்தை விதிகள் எங்களுக்கு பொருந்தாது என்று ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

2001-06ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை குற்றவியல் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ், அவரது மனைவி மறைந்த விஜயலட்சுமி, மகன் ஓ.பி.ரவீந்திரநாத், சகோதரர் ஓ.ராஜா ஆகியோரை விடுவிதித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

இதை எதிர்த்து ஓ,பன்னீர் செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (மார்ச் 25) ஓபிஎஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், “இந்த வழக்கை நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஏன் ஒத்திவைக்க வேண்டும்?. ஒத்திவைக்க வேண்டும் என்றால்…. மக்களவைத் தேர்தலுக்கு பிறகா? நீதிமன்ற விசாரணைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது தெரியுமா? என்று ஓபிஎஸ் தரப்புக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, சீராய்வு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மக்களவை தேர்தல்: விலைபோகும் வேட்பாளர்கள்!

Aadujeevitham: படம் எப்படி இருக்கிறது?… வெளியான முதல் விமர்சனம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share