மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: தலைமை நீதிபதி சந்திரசூட் இரங்கல்!

Published On:

| By Selvam

jurist fali s nariman passes away

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வயது மூப்பு காரணமாக இன்று (பிப்ரவரி 21) காலமானார். அவருக்கு வயது 95.

போபால் விஷவாயு விபத்து, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு உள்பட பல முக்கியமான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஃபாலி நாரிமன் ஆஜராகி வாதாடியுள்ளார். இவருக்கு 1991-ஆம் ஆண்டு பத்மபூஷன், 2007-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டது.

ஃபாலி நாரிமன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் பெரிய சட்ட வல்லுநர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.

உச்சநீதிமன்றத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவரது அனுபவம் என்பது சிறப்புவாய்ந்தது.

பல முக்கிய தீர்ப்புகளுக்கு கருவியாக இருந்துள்ளார், மேலும், நீதித்துறையில் அவர் செய்த பங்களிப்புகள் தலைமுறை கடந்தும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த விலை… ஒரு கிராம் எவ்வளவுன்னு பாருங்க!

பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share