ஜுனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் ’காம்போ’: அடுத்த அதிரடி தயார்!

Published On:

| By Minnambalam Desk

junor ntr prasanth neel next movie update

‘கேஜிஎஃப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை எடுத்த பிறகு, இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் இணையத் தயாரான நாயகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ முதல் பாகத்தைத் தந்தவர், அடுத்த பாகம் பற்றிப் பேசாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், ஜுனியர் என்.டி.ஆர். உடன் அடுத்து அவர் இணையப் போவதாகத் தகவல் வெளியானது. இந்த திரைப்படம் ஜுனியர் என்.டி.ஆரின் 31வது படமாக அமையவுள்ளது. அதற்கான அறிவிப்பும் வந்தது. junor ntr prasanth neel next movie update

இந்த நிலையில், இன்று அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்திருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல தகவல்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், ‘அதிகாரப்பூர்வமாக #என்டிஆர்நீல் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது’ என்று தெரிவித்திருக்கிறது.  

’இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க ஒரு சாதனையாளனை வரவேற்க இந்த மண் தயாராகிவிட்டது’ என்று இது குறித்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ரசிக பெருமக்களை ஜில்லிட வைக்க ஒரு புதிய ஆக்‌ஷன் அலை தயாராவதாகத் தெரிவித்திருக்கிறது.

’பிரமாண்டமான முறையில் ஒரு படம் தயாராகறப்போ இந்த பில்டப் கூட இல்லேன்னா எப்பூடி’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த கூட்டணியில் வெளியாகும் புதிய படமாவது இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று நம்மைச் சோதித்துவிடாமல் இருக்க வேண்டும். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share