ஜூன் 14ஆம் தேதி முப்பெரும் விழா : திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Published On:

| By christopher

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 8) மாலை நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 39 தொகுதிகளைகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவை,

1. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம்.

2. நடுத்தர மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது நீட் தேர்வு வேண்டாம் என சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், இந்த கோரிக்கையை கனிவுடன் கவனித்து ஒன்றிய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

3. நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.

4. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியை தந்த தமிழக மக்கள், வழிநடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

5. வரும் ஜூன் 14ல் கோவையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் உட்பட முப்பெரும் விழா நடத்தப்படும் என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? : விஜய்சேதுபதி விளக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share