வரிசைக்கட்டும் படங்கள்: போனியாகாத ஓடிடி… ‘வணங்கான்’ தப்புமா?

Published On:

| By Selvam

இந்த வருடம் ஜூன் வரை வெளியான 115 நேரடி தமிழ் படங்களில் 60% படங்களின் ஓடிடி உரிமம் இதுவரை விற்பனை ஆகாமல் உள்ளது சினிமா வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா வணிகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் – 2 படம் நேற்று (ஜூலை 12) வெளியானது. அதனை தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஜூலை 26 அன்று தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ராயன் படத்தை அவரே இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் வணங்கான், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் டிமாண்டி காலனி-2, நடிகை கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரகுதாத்தா ஆகிய மூன்று படங்கள் வெளியிடப்பட உள்ளது.

இவற்றில் டிமாண்டி காலனி-2 ,ரகு தாத்தா ஆகிய இருபடங்களையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

ADVERTISEMENT

டிமாண்டி காலனி-2 படத்தின் தமிழக விநியோக உரிமையை புதிய தயாரிப்பு நிறுவனமான பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் வாங்கியுள்ளது.

திரையரங்கங்கள் ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். வணங்கான் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை மாநாடு, ஸ்டார் படங்களின் தமிழ்நாடு உரிமையை வாங்கி வெளியிட்ட கோயம்புத்தூர் ஏரியா விநியோகஸ்தர் சுப்பையா சுமார் 11 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இந்த வருடம் ஜூன் வரை வெளியான 115 நேரடி தமிழ் படங்களில் 60% படங்களின் ஓடிடி உரிமம் இதுவரை விற்பனை ஆகாமல் உள்ளது.

முன்னணி நடிகர் படங்களின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.

பிறபடங்கள் திரைக்கு வந்த பின் அப்படங்களின் வெற்றியை பொறுத்து ஓடிடி உரிமை வியாபாரம் முடிக்கப்படுகிறது. அதே போன்ற நிலைமை வணங்கான், டிமாண்டி காலனி-2 படங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

நிதி கடன் மூலம் தயாரிக்கப்படும் படங்கள் வெளியீட்டுக்கு முதல் நாள் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும். அதற்கு தொலைக்காட்சி, ஓடிடி உரிமை விற்பனை மூலம் கிடைக்ககூடிய வருவாய் பிரதானமானது.

படம் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 15 என்பதால் அதற்குள் தொலைக்காட்சி, ஓடிடி உரிமை வியாபாரம் முடிந்துவிடும் என்கிற நம்பிக்கையில் வணங்கான், டிமாண்டி காலனி – 2 படங்களின் வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: பாமக, நாம் தமிழர் பின்னடைவு… திமுக தொடர்ந்து முன்னிலை!

சீமான் கைது எப்போது?

விக்கிரவாண்டி தேர்தல்: அன்னியூர் சிவா 5,468 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

விக்கிரவாண்டி தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கை… திமுக முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share