நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மே 13-ஆம் தேதி தெரிவித்துள்ளது. Judges Taking Tea Coffee Breaks
குற்றவியல் மேல்முறையீடு வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில் 3 ஆண்டுகள் கால தாமதம் செய்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்குகளை விசாரிக்க காலதாமதம் செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “உயர் நீதிமன்ற நீதிபதிகளின் செயல்திறனை நாங்கள் ஆராய விரும்புகிறோம்? நீதிமன்றத்தில் நீதிபதிகள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார்கள்? அவர்களின் உண்மையான செயல்திறன் என்ன? அதன் அளவுகோல் என்ன?
சில நீதிபதிகள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களின் அர்ப்பணிப்பு எப்போதும் பெருமையாக இருக்கிறது. ஆனால், சில நீதிபதிகளின் செயல்பாடுகள் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கும் விஷயங்களில் வெளிப்படையாக முடிவுகளை எடுக்க விரும்புகிறோம்.
சில நீதிபதிகள் தேநீர் இடைவேளை, காபி இடைவேளை, அந்த இடைவேளை, இந்த இடைவேளை என தொடர்ச்சியாக வேலை செய்வதில்லை. மதிய உணவு இடைவேளை மட்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக்கொண்டால், வழக்குகளை விசாரிப்பதில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். எனவே, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகளை ஆராய வேண்டும்” என்று தெரிவித்தனர். Judges Taking Tea Coffee Breaks