தமிழகத்தில் உள்ள நீதிபதிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் மாஜிஸ்திரேட், சப் ஜர்ஜ், முனிசீப், மாவட்ட கூடுதல் நீதிபதி, மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகள் என சுமார் 945 பேர் இருக்கின்றனர்.
இந்த நீதிபதிகளின் சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் எலக்ட்ரானிக் முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ. செம்மல், கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ST. லக்ஷ்மி ரமேஷ் ஆகிய இருவர் போட்டியிட்டனர்.
தேர்தல் அதிகாரிகளாக நீதிபதிகள் S. மீனாகுமாரி, G.சரஸ்வதி, எஸ்.S.பிரகாஷ் ஆகிய மூவர் செயல்பட்டனர்.
தேர்தலில் மொத்தம் 727 வாக்குகள் பதிவான நிலையில், இதில் 14 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ST லக்ஷ்மி ரமேஷ் 270 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், ப. உ. செம்மல் 435 வாக்குகள் பெற்று 165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். 8 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருந்தன.
துணை தலைவர்களாக நீதிபதி D பாலூ, சீனியர் சிவில் நீதிபதி RAS. ஆனந்தராஜ் ஆகியோரும், பொதுச்செயலாளராக நீதிபதி N. சுரேஷ், இணை செயலாளராக M.ஷக்கிரா பானு, பொருளாளராக சரவணபாபு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
யார் இந்த நீதிபதி ப.உ. செம்மல்?
தலைவராக வெற்றிப் பெற்றுள்ள ப.உ. செம்மல் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் துணைத் தலைவராக வெற்றிப் பெற்றவர்.
இவர் கடலூர், சிதம்பரம், காஞ்சிபுரம், அரியலூர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பல முக்கிய தீர்ப்புகளை கொடுத்தவர்.
பெரும்பாலும் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய செம்மல் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் பெரிய நூலகம் வைத்துள்ளார்.
இவரது தந்தை பழமலை கவிஞர், நூல் ஆசிரியர், முன்னாள் கல்லூரி பேராசிரியர் என புகழ்பெற்றவர் என்கிறார்கள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
’சிறந்த நடிப்பு என்பது என்ன தெரியுமா?’ : தேசிய விருது வென்ற நித்யா மேனன் நச் விளக்கம்!
“என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு?” : திமுகவை விமர்சித்த எடப்பாடி… ஆ.ராசா ஆவேச பதிலடி!