நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம்: ஏன்?

Published On:

| By Kavi

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஆனால் இன்று (ஜூலை 29) பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மகர் துவார் நுழைவு வாயிலில் பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் அதில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மகர் துவார் பகுதியில் இன்று காலை முதல் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து பிரஸ் கிளப் ஆப் இந்தியா சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த புதிய தடையை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

பத்திரிக்கையாளர்களின் குரலை பாஜக அரசு நசுக்குவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ராயன் படத்தின் 3 நாள் வசூல் இத்தனை கோடியா? : நன்றி தெரிவித்த தனுஷ்

”கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த வேண்டாம்” : அமைச்சர் மூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share