தை மாத நட்சத்திர பலன்கள்: பூராடம்

Published On:

| By Selvam

சுணக்கங்கள் நீங்ககூடிய காலகட்டம்.

அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் விஷயத்தில் ஒதுங்கி இருங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். எதிர்பாலரிடம் எச்சரிக்கை தேவை.

செய்யும் தொழிலில் லாபம் சீராகும். புதிய முதலீடுகளை யோசித்துச் செய்யுங்கள்.

அரசு, அரசியலில் உள்ளோர் வளர்ச்சிப் பாதை காண்பீர்கள். வாக்குறுதிகளை யோசித்துக் கொடுங்கள்.

கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலன் தரும். சிலருக்குப் பலகாலக் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி சேர்க்கும்.

இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம்.

வயிறு, காது, மூக்கு,தொண்டை உபாதைகள் வரலாம்.

வளர்ப்புப் பிராணிகளிடம் கவனமாக இருங்கள்.

பார்வதி வழிபாடு பசுமை சேர்க்கும்.

எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா… அப்டேட் குமாரு

தை மாத நட்சத்திர பலன்கள்: மூலம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share