யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
அடக்கமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்.
பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். அதேசமயம் வீண் தர்க்கமும் வேண்டாத ரோஷமும் தவிருங்கள்.
வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வெளியிடத்துக் கோபத்தை வீட்டில் காட்ட வேண்டாம். வாரிசுகளிடம் வீண் கடுமை தவிருங்கள். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள்.
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.
செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். கூட்டுத் தொழிலில் அலட்சியம் வேண்டாம்.
அரசு, அரசியலில் உள்ளோர் பொது இடங்களில் நிதானமாக இருங்கள். தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள்.
கலை, படைப்புத் துறையினர் வாய்ப்புகளை நிதானத்துடன் கவனியுங்கள். வீண் ஜம்பம் அறவே தவிருங்கள்.
வாகனத்தில் வித்தை காட்டல் வேண்டாம்.
கழுத்து, தோள்பட்டை, சளி தொந்தரவு வரலாம்.
அங்காளம்மன் வழிபாடு ஆனந்தம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…