ADVERTISEMENT

தை மாத நட்சத்திர பலன்கள்: அனுஷம்

Published On:

| By Selvam

சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கும் காலகட்டம்.
அலுவலகத்தில் எதிர்பாரா மாற்றங்கள் வரலாம். பொறுப்பு உயரும்போது பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள்.

இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். தம்பதியர் இடையே மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். வாரிசுகளால் பெருமை உண்டு. குடும்பத்துப் பெரியோர் உடல்நலம் சீராகும். சுபகாரியத் தடைகள் நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள்.

ADVERTISEMENT

செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் அனுபவம் இன்றி முதலீடு செய்ய வேண்டாம். கூட்டுத் தொழிலில் நேரடி கவனம் தேவை.

அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு பெருகும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.

ADVERTISEMENT

கலை, படைப்புத் துறையினருக்கு சீரான போக்கு நிலவும். தேவையற்ற களியாட்டம் தவிருங்கள்.

இரவுப்பயணத்தை இயன்றவரை தவிருங்கள்.

ADVERTISEMENT

பற்கள், எலும்பு, கால் உபாதைகள் வரலாம்.

முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னை ஐஐடி விளக்கம்!

தை மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share