யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம்.
அலுவலகத்தில் பதவி, பாராட்டுகள் வந்து சேரும். மூன்றாம் நபரின் பிரச்னையில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். தேவையற்ற தர்க்கம் உறவுகளுடன் வேண்டாம். சுபகாரியங்களில் அவசரம் கூடாது. பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள்.
செய்யும் தொழிலில் சலிப்பு கூடவே கூடாது. பலகால முயற்சிகள் நிச்சயம் பலன் தரும். பங்குவர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.
அரசு, அரசியலில் உள்ளோர் பொறுமையாக இருங்கள். மேலிடத்தின் அனுமதி இன்றி எதையும் செய்ய வேண்டாம்.
கலை, படைப்புத் துறையினர் கனவுகள் நனவாகும்.
அயல்நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடங்கள். பயணத்தில் உடைமைகளில் கவனம் இருக்கட்டும்.
கண்கள், தொண்டை, இடுப்பு உபாதைகள் வரலாம்.
முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறு… என்னென்ன பரிசுகள் தெரியுமா?
ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள்!
