எண்ணங்கள் ஈடேறும் காலகட்டம். அதேசமயம் எதிலும் நிதானம் தேவை.
பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். புதிய பொறுப்புகளை திட்டமிட்டுச் செய்யுங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். அசையும் அசையா சொத்து சேரும். தேவையற்ற களியாட்டம் தவிருங்கள்.
செய்யும் தொழிலில் முயற்சிகள் பலன் தரும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.
அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வளர்ச்சி ஏற்படும். தேவையற்ற நட்புகளை உடனே உதறுங்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகள் தொடர் முயற்சிகளால் வெல்வீர்கள்.
அயல்நாட்டு சட்டதிட்டங்களில் அலட்சியம் வேண்டாம்.
பயணத்தில் உடைமைகள் பத்திரம்.
மன அழுத்தம், அஜீரணம், கண் உபாதைகள் வரலாம்.
பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…