ஜோயல் தாயார் மரணம்: 140 கிலோ மீட்டர் சுற்றிச் சென்ற உதயநிதி

Published On:

| By Aara

Joel's mother dies

நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களை வெள்ளம் புரட்டிப் போட்டிருக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் ஜோயலின் தாயார் மரணம் அடைந்த செய்தி  திமுக  இளைஞரணியினரை கண்ணீர் வெள்ளத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. Joel’s mother dies

டிசம்பர் 20 ஆம் தேதி மாலை ஜோயல் தூத்துக்குடி நகர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில்தான்,  அவரது சொந்த கிராமமான லட்சுமிபுரத்தில் வசித்து வந்த தாயார் எஸ்தர் செல்வம் முதுமை மற்றும் உடல் நலக் குறைவால் காலமாகிவிட்டார். தகவல் கிடைத்து தன்  சொந்த ஊருக்குப் போயிருக்கிறார் ஜோயல்.

ADVERTISEMENT

தென் மாவட்ட நிவாரணப் பணிகளை கவனித்து வந்த அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 20 ஆம் தேதி சென்னை சென்றார்.

அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவருக்கு ஜோயலின் தாயார் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டதும்,  ஜோயலைத் தொடர்புகொண்டு  இரங்கல் தெரிவித்துள்ளார். இறுதிச் சடங்குகள்  டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு என திட்டமிடப்பட்டிருப்பதை அறிந்துகொண்டார் உதயநிதி.

ADVERTISEMENT

உடனடியாக   அந்த கிராமத்துக்கு செல்ல திட்டமிட்டார் உதயநிதி. ஆனால், தூத்துக்குடி வழியாக செல்ல முடியாது என்றும் திருநெல்வேலி வழியாக சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

அதனால் என்ன என்று கேட்ட உதயநிதி,  நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று  அங்கிருந்து அமைச்சர் அன்பில் மகேஷுடன் காரில் புறப்பட்டார்.

ADVERTISEMENT

திருச்சியில் இருந்து காரில் திருநெல்வேலி சென்று அங்கிருந்து  நாங்குநேரி, சாத்தான்குளம், மெய்ஞானபுரம், பரமக்குறிச்சி,  உடன்குடி வழியாக ஜோயலின் சொந்த கிராமமான லட்சுமிபுரத்துக்கு  சுமார் 140 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சென்றார் உதயநிதி.

தாயாரை இழந்து தவித்த ஜோயலை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன உதயநிதி, எஸ்தர் செல்வத்தின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Joel's mother dies

அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷும் சென்றிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் ஜோயலுக்கு அலைபேசியில் பேசி தாயார் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஜோயலைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்ட பிரமுகர்களும் வெள்ள பாதிப்புக்கு  இடையே  பல தடைகளைக் கடந்து ஜோயல் இல்லத்துக்குச் சென்று  அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

ரூ.4000 கோடியை என்ன செய்தீர்கள்? திமுக அரசுக்கு நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

திரும்ப வந்துட்டோம்னு சொல்லு… சொந்த மண்ணில் வெற்றிவாகை சூடுமா தமிழ் தலைவாஸ்?

Joel’s mother dies

Photo of author
Aara

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share