அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ஜோ பைடன்

Published On:

| By Selvam

Joe Biden clinches democratic nomination

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தநிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது.

இந்த தேர்தலில் 1,968 பிரதிநிதிகள் ஆதரவை பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளனர்.

பின்னர் நாட்டு மக்களிடம் ஜோ பைடன் உரையாற்றியபோது, “அமெரிக்காவின் எண்ணத்தையே அச்சுறுத்தும் வகையில் வெறுப்பு, பழிவாங்கும் பிரச்சாரத்தை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க மக்கள் மீண்டும் நம்மை ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நாட்டின் எதிர்காலம் குறித்து வாக்காளர்களுக்கு இப்போது ஒரு தெளிவு இருக்கிறது.

நமது ஜனநாயகத்தை பாதுகாக்கப் போகிறோமா அல்லது மற்றவர்கள் அதனை அழிக்கவிடப் போகிறோமா? நமது சுதந்திரத்தை தேர்ந்தெடுக்கும் மற்றும் பாதுகாக்கும் உரிமையை மீட்டெடுப்போமா அல்லது தீவிரவாதிகள் அவற்றை பறிக்க அனுமதிப்போமா? சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் அமெரிக்காவில் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கோடையில் ஏற்படும் அரிப்பு… விரட்டுவது எப்படி?

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு எத்தனை தொகுதிகள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share