நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக, பிப்ரவரி 9ம் தேதியை அனுசரித்து, தேச கோஷங்கள் எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜேஎன்யு மாணவர் தலைவர் கன்ஹையா குமார், துணைத் தலைவர் அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் உமர் காலித் உட்பட ஏழுபேர் மீது தேசவிரோத வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அமைப்பான நவ்நிர்மாண் சேனா தலைவரான அமித் ஜானி, வழக்கில் சிக்கிய மாணவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் ஜேஎன்யு-வை காலி செய்யவில்லை என்றால், அவர்களை 10 ஆட்களை அனுப்பி சுட்டுக்கொல்ல இருப்பதாக கொலை மிரட்டல் விடுத்தார். மாணவர் தலைவர் கன்ஹையாவுக்கு மூன்று பாதுகாவலர் பாதுகாப்பளித்து வருகிறார்கள். இதையடுத்து, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உமர், டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸாரின் விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
