ஜம்மு காஷ்மீர் தேர்தல்… முதல் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!

Published On:

| By Minnambalam Login1

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 26) பாஜக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பறிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும்தான் சட்டமன்றம் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தார். இந்த தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என்று மூன்று கட்டமாக நடைபெறும் மற்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 அன்று நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

செப்டம்பர் 18-ஆம் தேதி 24 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த கட்டத்திற்கான 15 வேட்பாளர்களின் பட்டியலைத்தான் பாஜக இன்று அறிவித்துள்ளது.

அந்தப் பட்டியல்:

  1. பாம்போர் – சையத் சௌகத் கயூர் அந்திரபி,
  2. ராஜ்போரா – அர்ஷித் பட்,
  3. ஷோபியன் – ஜாவேத் அஹ்மத் காத்ரி,
  4. அனந்த்னக் மேற்கு – முஹம்மத் ரஃபீக் வானி,
  5.  அனந்த்னக் – சையத் வசாஹத்,
  6. ஸ்ரீகுஃப்வாரா பிஜ்பெஹரா – சோஃபி யூசுஃப்,
  7. ஷங்குஸ் அனந்தக் கிழக்கு – வீர் சரஃப்,
  8. இந்தர்வால் – தாரீக் கீன்,
  9. கிஷ்த்வார் – ஷகுன் பரிஹர்,
  10. பத்தெர் நக்செனி – சுனில் ஷர்மா,
  11. பதர்வா – தலீப் சிங் பரிஹர்,
  12. தோடா – கஜய் சிங் ரானா,
  13. தோடா மேற்கு – ஷக்தி ராஜ் பரிஹர்,
  14. ரம்பன் – ராகேஷ் தாகூர்,
  15. பனிஹல் – சலீம் பட்.

இந்த 15 நபர்களில் இருக்கும் ஒரே பெண் வேட்பாளர் ஷகுன் பரிஹர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

தோள்பட்டை வலி… பெற்றோரிடம் கூட சொல்லாத சுமை தூக்கும் சிறுவன்! கலங்கடித்த நீயா நானா?

“நீங்கள் இந்துவா ?” – நமிதாவுக்கு நடந்தது என்ன? மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம்!

தலைமை பொறுப்பு போய்விடும்… அண்ணாமலைக்கு பயம்: கே.பி.முனுசாமி காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share