ஸ்ரீதேவி மகளின் ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’!

Published On:

| By Balaji

நெட்பிளிக்ஸின் பிரபல ஆந்தாலஜி சினிமாவான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-ஐ தொடர்ந்து, ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ வெளியாகவுள்ளது. இதில் ஜான்வி கபூர் நடிக்கின்றார்.

2018ஆம் ஆண்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் நான்கு குறும்படங்கள்(ஆந்தாலஜி) அடங்கிய திரைப்படமாக வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ். அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோஹர் என இந்தி சினிமாவின் முக்கியமான நான்கு இயக்குநர்கள் இதில் இடம்பெற்ற குறும்படங்களை இயக்கியிருந்தனர். பெண்களின் பாலியல் குறித்த முக்கியமான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிய இப்படம் வழக்கம் போல சர்ச்சையானது. பல்வேறு அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்திருந்த போதும், இப்படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த நான்கு இயக்குநர்களும் இணைந்து மீண்டும் உருவாக்கியுள்ள படம் ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் ஜனவரி 1, 2020-ல் நான்கு பேய் கதைகள் அடங்கிய கோஸ்ட் ஸ்டோரிஸை வெளியிடவுள்ளது.

ADVERTISEMENT

இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு வீடியோவில், இது பேய்கள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளைக் கொண்டிருக்கும் வித்தியாசமான படைப்பு என்று அனுராக் கஷ்யப் கூறினார். மேலும் இது “உண்மையில் மனிதனல்லாத விஷயங்களைப் பற்றியது” என்றும் மற்றொரு இயக்குனரான பானர்ஜி குறிப்பிட்டார்.

இதில் சோபிதா துலீப்பியா, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், விஜய் வர்மா, குல்ஷன் தேவய்யா, மிருனாள் தாகூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

“வெளியாகி 2 வருடங்கள் ஆனாலும், லஸ்ட் ஸ்டோரிஸின் மகத்தான வெற்றியை பற்றி இன்னமும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்று அழைக்கப்படும் எங்கள் இரண்டாவது ஆந்தாலஜி மூலம் மீண்டும் அந்த மேஜிக்கை செய்ய விரும்புகிறோம்” என தயாரிப்பாளர்களில் ஒருவரான ரோனி ஸ்குரூவாலா தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share