டூர் சென்ற அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை!

Published On:

| By vanangamudi

Jewelry and cash worth Rs. 1 crore stolen from govt officer house

சென்னை ஆயுர்வேத சித்த மருத்துவமனையில் ஏ. இ. ஓ அதிகாரியாக இருந்து வருபவர் முத்து பெருமாள். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதில் ஒருவர் சித்த மருத்துவர், இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்து பெருமாள் தற்போது ஸ்ரீபெரும்பதூரில் நகரப்பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். Jewelry and cash worth Rs. 1 crore stolen from govt officer house

அவர் கடந்த மே 25ஆம் தேதி தனது குடும்பத்துடன் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுலா சென்றார். பின்னர் தேதி 31ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கேட் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போனவர், வீட்டில் உள்ள பீரோ லாக்கரை திறந்து பார்த்தபோது, அங்கிருந்து 21 லட்சம் பணம் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்ரீபெரும்பதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் முத்து பெருமாள். இதனை இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் மற்றும் டிஎஸ்பி கீர்த்தி வாசன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். எஸ்.பியும் உடனடியாக தனி டீம் அமைத்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய உத்தர்விட்டார்.

காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம்

அதன்படி டிஎஸ்பி கீர்த்தி வாசன், இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அவசரமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா, செல்போன் டவர் ஆகியவற்றை அலசி ஆராய்ந்தனர்.

கடந்த 30ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அதில், ஒரு பைக்கில் மூன்று கொள்ளையர்கள் 30ஆம் அதிகாலை ஒன்றரை மணியளவில் கொள்ளையடிக்க போவதும், வருவதும் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர்கள் சென்ற வழியில் ஒவ்வொரு சிசிடிவி கேமிராவையும் பார்க்கும்போது, சென்னையை நோக்கி அவர்கள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சென்னை மாநகர் போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.

இதன்மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தப்போடிய கும்பல் யார், எங்கே இருக்கிறார்கள்? என்ற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள ரயில்வே நிலையங்கள், சப்வே, சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இரவு நேரத்தில் தூங்குபவர்களிடம் சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் எனவும் போலீஸ் உறுதியளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share