கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகை கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பலர், சென்னை பூக்கடை பகுதியில், நேற்று மாலை அமைதி ஊர்வலம் நடத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாளை முதல்(ஏப்-2)ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, நகை கடைகளை மூடப்போவதாக, உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, ”கலால் வரியை, மத்திய அரசு திரும்ப பெறவில்லை. இதனால் தமிழகம், மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மூடப்படும்,” என்றார்.