சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சரிந்து இருப்பது பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம், ஒரு சவரன் 37 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதேபோல, கிராம் 4,651 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரேயடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு 328 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி தங்கம் ஒரு சவரன் ரூ.36,880 ஆகவும், கிராம் ரூ.4,610 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கு விற்பனையாகிறது. அதன் அடிப்படையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.67,000க்கு விற்பனையாகிறது.
கலை.ரா
சென்னையில் துவங்கும் பத்து தல படப்பிடிப்பு!
Comments are closed.