“வருஷ கணக்கா டியூஷன் போய், ராத்திரி பகலா படிச்சிருப்போம்… ஆனா எக்ஸாம் அன்னைக்கு ஒரு சின்ன ஐடி கார்டை மறந்தா? மொத்த உழைப்பும் வீணா போயிடும்!”
பொறியியல் கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்களே… 2026ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின்ஸ் (JEE Main) தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. தேர்வு மையத்திற்குள் நுழையும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகளைத் தேசியத் தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. “எனக்கு எல்லாம் தெரியும்”னு அலட்சியமா இருக்காதீங்க… உள்ளே போறதுக்கு முன்னாடி இந்த செக்லிஸ்ட்டை ஒருமுறை பாத்துடுங்க.
எதை மறக்கக் கூடாது? (Must Carry) தேர்வு மையத்திற்குச் செல்லும் போது உங்கள் கையில் இவை கண்டிப்பாக இருக்க வேண்டும்:
- அட்மிட் கார்டு (Admit Card): என்டிஏ இணையதளத்தில் டவுன்லோட் செய்த கலர் பிரிண்ட் அவுட்.
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ: விண்ணப்பத்தில் ஒட்டிய அதே புகைப்படம் ஒன்று கூடுதல் கையில் இருக்க வேண்டும் (Attendance Sheet-ல் ஒட்டுவதற்கு).
- ஒரிஜினல் ஐடி கார்டு: ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட். (ஜெராக்ஸ் காப்பி அல்லது போனில் போட்டோ காட்டினால் கண்டிப்பாக அனுமதி இல்லை!).
டிரெஸ் கோட் என்ன? (Dress Code) “இது பேஷன் ஷோ இல்ல பாஸ்… எக்ஸாம்!” அதனால் ரொம்ப சிம்பிளா போங்க.
- காலணி: ஷூ (Shoes) அணிந்து வரக் கண்டிப்பாக அனுமதி இல்லை. சாதாரண செருப்பு (Slippers) அல்லது சாண்டல்ஸ் மட்டுமே அணிய வேண்டும்.
- ஆடை: முழுக்கை சட்டை (Full sleeves) அணியக்கூடாது. பெரிய பெரிய பட்டன்கள் வைத்த சட்டைகளுக்கும் அனுமதி இல்லை. மெல்லிய ஆடைகளை அணிந்து செல்வது நல்லது.
- நகைகள்: செயின், கம்மல், மோதிரம், மூக்குத்தி என எந்த உலோகப் பொருட்களையும் அணிந்து செல்லாதீர்கள். மெட்டல் டிடெக்டர் சோதனையில் சிக்கல் வரும்.
தடை செய்யப்பட்டவை: செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், பென் டிரைவ், ஹெட்செட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பென்சில் பாக்ஸ், ஹேண்ட்பேக் போன்றவற்றையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். (தண்ணீர் பாட்டில் வேண்டுமானால் ட்ரான்ஸ்பரன்ட் பாட்டிலாக எடுத்துச் செல்லலாம்).
தேர்வு மைய வாசலில் நின்னுகிட்டு, ‘ஐயோ ஐடி கார்டை வீட்ல வச்சுட்டு வந்துட்டேனே’னு அழுது புலம்புறத விட, இன்னைக்கு நைட்டே எல்லாம் எடுத்து பையில வச்சிடுங்க. பயோமெட்ரிக் வருகைப் பதிவு (Biometric Attendance) இருப்பதால், ரிப்போர்ட்டிங் டைமுக்கு (Reporting Time) குறைந்தது ஒரு மணி நேரம் முன்னாடியே சென்டருக்குப் போயிடுங்க. பதட்டம் இல்லாம ரிலாக்ஸா எழுதினாலே பாதி வெற்றி உறுதி. ஆல் தி பெஸ்ட்!
