விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை இன்று (நவம்பர் 15) பிறப்பித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால், ஜெயம் ரவி திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். திரையுலகில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2009 ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்யவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் ஜெயம் ரவி தான் எடுத்த விவாகரத்து முடிவுக்கு தன் மனைவி ஆர்த்தி மற்றும் அவரின் தாயார் இருவரின் நடவடிக்கைகள் காரணம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: 21 வயது பழங்குடி எம்.பியின் கொந்தளிப்பால் அதிர்ந்த நியூசிலாந்து
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற்றது என்.பி.பி!
